YouTurn

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.7%, மற்றும் கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தலா 0.6% என்ற அளவில் உள்ளன.

பரவிய செய்தி

Pakistan Janta Party

image.png

X Link / Archived Link 

விரிவான விளக்கம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில், 49% பேர் பாகிஸ்தானிலிருந்தும், 14% பேர் அமெரிக்காவிலிருந்தும், 14% பேர் பங்களாதேஷிலிருந்தும், வெறும் 9% மட்டுமே இந்தியாவிலிருந்து இருப்பதாகக் கூறி வரைபடம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 


பரவி வரும் இந்த தகவல் உண்மையா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தனது எக்ஸ் பக்கத்தில், “அந்தக் கணக்கை ஹேக் செய்ய நீங்கள் தீவிரமாக முயன்றும் அதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, உண்மையான தரவுகளை நான் பகிர்ந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்று வெளியிட்டுருந்தார். அதில் CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.7%, மற்றும் கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தலா 0.6% என்ற அளவில் உள்ளன என்பதை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து Times of India ஊடகத்தில் அபிஜீத் தீப்கே, சிஜேபி-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் திரைப்பதிவை அனுப்பி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சிஜேபி-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களில் 94.7 சதவீதம் பேர் இந்தியர்கள். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து வெறும் 1 சதவீதமும், இங்கிலாந்திலிருந்து 0.7 சதவீதமும், கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 0.6 சதவீதமும் இருந்ததை பார்க்கமுடிந்தது. 

image.png


முடிவு: 


கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரியவந்தது. இதை அக்கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில், 49% பேர் பாகிஸ்தானிலிருந்து என்று பாஜகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.