YouTurn

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

நாட்டின் பெருமையாக  தொடங்கி வைக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயிலின் மீது டெல்லியில் உள்ள கரப்பான் பூச்சிகள் 

கற்களை வீசுகின்றன..!! 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர். இதன் எதிரொலியாக, தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 

இந்நிலையில் போராட்டத்தின் போது, பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பாஜகவினர் வீடியோ ஒன்றை வைராலாக்கி வருகின்றனர். 


உண்மை என்ன? 

பரவி வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Republic World ஊடகப் பக்கத்தில் “Students Protest Against Train Delay, Clash With Police | Patna | Bihar” என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ ஜூன் 14, 2026 அன்று வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.


இதையடுத்து இதை வைத்துக்கொண்டு keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது “Stone pelting, vandalism erupt at Patliputra station over train delays ahead of Bihar police exam” என்ற தலைப்பில் The New Indian Express ஊடகத்தில் ஜூன் 14, 2026 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


மேலும் பரவி வரும் வீடியோ குறித்து Northern Railway எக்ஸ் பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் இருப்பது ஹைட்ரஜன் ரயில் இல்லை என்றும், அது WAG 12 வகை இன்ஜின் மூலம் இயக்கப்படும் ஒரு ரயில் என்றும், பரவி வருவது பழைய காணொளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



முடிவு: 


கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வருவது பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தோட தொடர்ப்புப்படுத்தி தவறாக பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.