யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கையில் ஜூலை 19 ஆம் தேதியே வெள்ளம் தொடங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிம்ரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 3 ஆம் தேதியே இவ்வீடியோ பகிரப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களை வெள்ளம் வடிந்தோடியபின் தேடிச் சென்றவர்கள் கண்ட அதிர்ச்சியான காட்சி இது.

விரிவான விளக்கம்
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் மொத்தம் 3,00,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம். அப்போது சிம்ரன் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ, ஜூலை 03, 2026 அன்று முதன்முதலில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதையடுத்து அந்த பக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்கையில், இதுப்போன்று மற்றொரு வீடியோவும் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதையடுத்து அந்த பக்கத்தில், அந்த வீடியோ எப்படி உருவாக்கப்பட்டது என்ற வீடியோ ஜூலை 11, 2026 அன்று பகிரப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது, பரவி வரும் வீடியோ புனையப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதை உறுதி செய்ய, அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கையில் ஜூலை 19 ஆம் தேதியே வெள்ளம் தொடங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிம்ரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 3 ஆம் தேதியே இவ்வீடியோவை பகிரப்பட்டுள்ளது.
முடிவு:
கிடைத்துக்கும் ஆதாரங்களின்படி, அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிட்டு பரவும் வீடியோ தவறானவை. இது புனையப்பட்ட வீடியோவாகும்.