யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற இருந்த, 10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா பிப்ரவரி 28ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் எங்கு என்று குறிப்பிடமால் இந்த போர் சூழலால், மார்ச் 02 தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடினோம். முதலில் இந்தியாவில் சி.பி.எஸ்.இ தேர்வு தொடங்கியது குறித்து பார்த்தோம். அப்போது தினத்தந்தி ஊடகத்தில் பிப்ரவரி 17, 2026 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 17 தொடங்குகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது NDTV Education ஊடகத்தில், CBSC அறிக்கை உடன் மார்ச் 01, 2026 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற இருந்த, 10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் தினகரன், News18 Tamil போன்ற ஊடகங்களிலும், இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் மார்ச் 02 அன்று நடைபெற இருந்த 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைத்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற இருந்த, 10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திரித்து, எங்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என்று குறிப்பிடாமல், மக்களை குழப்பும் வகையில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
