YouTurn

News 18 ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

News 18 ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

News 18 ஊடகம் "Vote Vibe" மற்றும் "சாணக்கியா" கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியில், சாணக்கியா ஊடகத்தின் கருத்துக்கணிப்பு குறித்த புகைப்படங்களை மட்டும் எடுத்து சமூக ஊடகங்களில் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். "Vote Vibe" நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கத்து.

பரவிய செய்தி

மக்களின் குரல் – ஊடக கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக

யார் வரவேண்டும்?என்று News18 தேசிய ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில்,

33% மக்கள் ஆதரவு

புரட்சித் தமிழர் @EPSTamilNadu

அடுத்த முதலமைச்சர் – EPS

அதோடு நிற்கவில்லை…

எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு,

37% மக்கள் ஆதரவு

அதிமுக – பாஜக கூட்டணி இது விளம்பரம் அல்ல…

வாக்குச்சாவடி போகும் முன்பே வெளிப்படும் மக்களின் தீர்ப்பு. 

அரசின் முகமூடி களைந்து,மாற்றத்தை நோக்கி நகரும் தமிழ்நாடு.

வெற்றி கூட்டணியின் பாதையில் மக்கள். 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்கள் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று News18 ஊடகம் கருத்துக் கணிப்பு நடத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் 33%  பேர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைப்பதாகவும், அதிமுக - பாஜக கூட்டணி 37% வாக்களிக்க விரும்புவதாகவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


உண்மை என்ன? 

முதலில் News 18 ஊடகம் இப்படியான கருத்துக்கணிப்பை நடத்தியதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது ”Tamil Nadu Assembly Elections Build-Up Heats Up | DMK vs NDA vs TVK | Who’s Ahead?” என்ற தலைப்பில் Vote Vibe மற்றும் சாணக்கியா கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியை பார்க்கமுடிந்தது. 


அந்த விவாத நிகழ்ச்சி வீடியோவை பார்க்கையில், சரியாக 15:49வது நிமிடத்தில் சாணக்யா ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் இபிஸ் 33%, ஸ்டாலின் 27%, விஜய் 24% வாக்குகளை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை தான் News 18 ஊடகம் கருத்துக்கணிப்பு என்று பரப்புகின்றனர். 


அதே போல் 15:14வது நிமிடத்தில் அதே சாணக்யா ஊடகம் நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என 38% பேர், திமுக வெற்றி பெறும் என 33%, தவெக வெற்றி பெறும் என 21% பேர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்பையும் News 18 ஊடகம் நடத்தியது போல் பரப்புகின்றனர். 


இறுதியாக News 18 ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து அந்த விவாத நிகழ்ச்சி வீடியோவில் தேடிப் பார்த்தோம். சரியாக 5:04வது நிமிடத்தில் "Vote Vibe" என்ற பெயரில் News 18 ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் ஸ்டாலின் 33.3%, இபிஸ் 29.8%, விஜய் 23.2% வாக்குகளை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, Vote Vibe நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


முடிவு: 

நம் தேடலில், News 18 ஊடகம்  "Vote Vibe" மற்றும் "சாணக்கியா" கருத்துக்கணிப்புகள் குறித்து நடத்திய விவாத நிகழ்ச்சியில், சாணக்கியா ஊடகத்தின் கருத்துக்கணிப்பு குறித்த புகைப்படங்களை மட்டும் எடுத்து சமூக ஊடகங்களில் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். "Vote Vibe" நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கத்து. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க