YouTurn

மும்பை மீரா சாலையில் ராம பக்தர்களை தாக்கியவர்களை காவலர்கள் தாக்குவதாகப் பரவும் பொய்!

மும்பை மீரா சாலையில் ராம பக்தர்களை தாக்கியவர்களை காவலர்கள் தாக்குவதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மும்பை மிரா ரோட்டில் சென்ற ராம பக்தர்களைத் தாக்கிய ஏக இறைவன் சீடர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்திருக்காங்க போலீஸ்.



விரிவான விளக்கம்

னவரி 22ம் தேதி அயோத்தியாவில் இராமர் கோயில் திறப்பை முன்னிட்டு ஜனவரி 21ம் தேதி மும்பையின் மீரா சாலையில் காவிக்கொடியுடன் ஜெய் ஸ்ரீராம் கோசத்துடன் வாகனங்களில் ஊர்வலம் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு இந்து-முஸ்லீம் மோதல் உருவானது. அதற்கு அடுத்தநாள் நடத்த பேரணியிலும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் பரப்பரப்பை எற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் வாகனங்களில் செல்லும் முஸ்லீம்கள் பெயரைக் கேட்டு தாக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டன. இதற்கிடையில், அங்குள்ள நயா நகர் பகுதியில் இயங்கி வந்த கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.
இந்நிலையில், மீரா சாலையில் ராம பக்தர்களை தாக்கியவர்களை காவல்துறை கைது செய்து தாக்கிய காட்சிகள் எனக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.






உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீபிரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், சிலர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் காட்சி கடந்த 2022ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூர் பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் என செய்தியில் வெளியாகி இருக்கிறது.



அடுத்ததாக, சிறையில் இருப்பவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோவும் கடந்த 2022ம் ஆண்டு சகாரன்பூர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவே. இதுகுறித்த செய்தி, 2022 ஜூன் 17ம் தேதி பிபிசி இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.



2022ல் பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த அவதூறு பேச்சுக்கு எதிராக சகாரன்பூர் பகுதியில் உள்ள மசூதி அருகே வெள்ளிக்கிழமை தொழுகையின் போது போராட்டம், பேரணி நடைபெற்றது. அப்போது அங்குள்ள கடைகள் மீதும், வியாபாரிகளையும் சிலர் தாக்கி உள்ளனர். இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதுதொடர்பாக, 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கும் அங்கு நடந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என பிபிசி மற்றும் நியூஸ் கிளிக் வெளியாகி இருக்கிறது. அப்போது கைது செய்தவர்களை காவல்துறையினர் தாக்கும் வீடியோவே தற்போது தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு 

முடிவு : 

நம் தேடலில், மும்பையின் மீரா நகரில் ராம பக்தர்களை தாக்கியவர்களை காவல்துறை சிறையில் வைத்து அடிப்பதாகப் பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோக்கள் கடந்த 2022ல் உபியின் சகாரன்பூர் பகுதியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்கள் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க