YouTurn

மெஹந்தியில் UPI QR குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

மெஹந்தியில் UPI QR குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி !!! இப்போது நீங்கள் மெஹந்தி வடிவமைப்பில் UPI QR குறியீட்டைப் பார்க்கலாம்.

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ந்திய பண பரிவர்த்தனை முறைகளில் அதிவேக வளர்ச்சியடைந்து வரும் UPI (Unified Payments Interface) பண பரிவர்த்தனையானது, வருகின்ற 2026-27 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 100 கோடி பண பரிவர்த்தனைகளை எட்டும் என PwC அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டில் 103 பில்லியனாக இருந்துள்ள பரிவர்த்தனைகள், வருகின்ற 2026-27 நிதியாண்டில் 411 பில்லியன் பரிவர்த்தனைகளாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் பெண் ஒருவரின் கையில் மெஹந்தியால் QR குறியீடு வரையப்பட்டு, பின்னர் அந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி, UPI பண பரிவர்த்தனை செய்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



Archive Link:



உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததன் மூலம், இந்த வீடியோவை பதிவு செய்தவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டுபிடித்தோம்.




yash_mehndi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 27 அன்று இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், டெல்லியைச் சேர்ந்த யாஷ் என்ற பெண்மணி தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார் என்பதையும் இந்த இன்ஸ்டாகிராம்  பக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.








மேலும் இதில், "இந்த வீடியோவில் உள்ள பண பரிவர்த்தனை காட்சிகளை, ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் எனது மெஹந்தி வீடியோவில் இணைத்துக்கொண்டேன். இந்த மெஹந்தி QR குறியீட்டை, பணம் செலுத்த பயன்படுத்த முடியாது. இது வேடிக்கைக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டது." என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதையும் காண முடிந்தது. 





முடிவு:


நம் தேடலில், மெஹந்தியில் QR குறியீடு மூலம் UPI பரிவர்த்தனை என்று பரவி வரும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், இது ஒரு எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க