YouTurn

மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு எனப் பரவும் கேம் வீடியோ !

மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு எனப் பரவும் கேம் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இது ஒரு பிரமாண்ட திரைப்பட காட்சியல்ல மணிப்பூரில் அரங்கேற்றிய வன்முறை.Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியினரல்லாத மெய்தியினருக்கு (Meetei or Meitei) பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட போவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற போராட்டங்களானது கலவரமாக மாறி அம்மாநிலமே பற்றி எரிந்தது. இதன் விளைவால் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டதோடு, கலவரக்காரர்களை கண்டால் சுடவும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு என சரமாரியாக துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளியேறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link

மேலும், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தில் குக்கி இன மக்கள் மெய்தியின மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதாகவும் இவ்வீடியோவை பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு தேடுகையில், 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ஐ லவ் அர்மாஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.



Twitter link | Archive link

மேற்கொண்டு தேடுகையில், 2020 ஜூலை 5ம் தேதி Threatty எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வீடியோவை பதிவிட்டு இருக்கின்றனர். அதில், Call of duty, GTA, Freefire போன்ற விளையாட்டுகளின்(கேம்) பெயர்களை ஹாஷ்டாக்களாக கொடுத்துள்ளனர்.

Instagram Link 

மேலும் படிக்க : ‘என் மாநிலம் பற்றி எரிகிறது’ : மேரி கோம்.. மணிப்பூரில் தொடரும் கலவரங்கள்… காரணம் இது தான்!

இதற்கு முன்பாக, மணிப்பூரில் நிகழும் கலவரங்களுக்கான காரணங்கள் குறித்த விரிவான கட்டுரையும் யூடர்ன் தரப்பில் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், மணிப்பூரில் அரங்கேறிய வன்முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு எனப் பரப்பப்படும் வீடியோ பொய்யானது. அந்த வீடியோ கடந்த 2020ல் இருந்து பரவி வரும் கேம் வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க