YouTurn

மணிப்பூரில் ஆறுதல் சொல்ல சென்ற பாஜக நிர்வாகிகளை மக்கள் விரட்டி அடித்ததாகப் பரவும் பழைய வீடியோ !

மணிப்பூரில் ஆறுதல் சொல்ல சென்ற பாஜக நிர்வாகிகளை மக்கள் விரட்டி அடித்ததாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆறுதல் சொல்ல சென்ற உள்ளூர் பாஜக நிர்வாகிகளை அங்குள்ள மக்கள் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது!Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ணிப்பூர் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை திரும்பிவரும் நிலையில், மணிப்பூர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த 21 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்று இரண்டு நாள் பயணமாக கடந்த ஜூலை 29 அன்று மணிப்பூர் சென்றது.

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆறுதல் சொல்ல சென்ற உள்ளூர் பாஜக நிர்வாகிகளை அங்குள்ள மக்கள் விரட்டும் காட்சி என்று கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவிநிற துண்டுகளை கழுத்தில் அணிந்துள்ள மூன்று பேரை, கும்பல் ஒன்று அடித்து விரட்டும் காட்சி காட்டப்பட்டுள்ளது.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2017ல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

Rifat Jawaid என்பவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2017 அக்டோபர் 06 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், "வங்காளத்தின் பாஜக தலைவரான திலீப் கோஷ் டார்ஜிலிங்கில் வைத்து தாக்கப்பட்டார். கோர்கா மக்களால் தலைவர்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டனர். (முழு வீடியோ உள்ளே)" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



Archive Link:


மேலும், ABP NEWS தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவுடன் ஒத்துப்போவதை காண முடிந்தது. "டார்ஜிலிங்கில் பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது தாக்குதல்" என்ற தலைப்புடன் கடந்த 2017 அக்டோபர் 06 அன்று இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 




2017 அக்டோபர் 05 அன்று 'தி எகனாமிக் டைம்ஸ்' செய்தியில் வெளியான கட்டுரையில், "பாரதிய ஜனதா கட்சியின் வங்காளத் தலைவரான திலீப் கோஷ் டார்ஜிலிங்கில் கோர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த பிமல் குருங் எதிர்ப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டார். பின்னர் கோஷ் தனது நிர்வாகிகளுடன் காவல் நிலையம் சென்று எஃப்ஐஆர் பதிவு செய்தார். தங்கள் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் மத்திய கொல்கத்தாவில் சாலை மறியல் செய்து, மாலையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சியினரிடம் ‘மோடி எங்களை பார்த்துக் கொள்வார்’ என மெய்தியினப் பெண் கூறியதாகப் பரவும் பொய் !

மேலும் படிக்க: மணிப்பூர் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பரவும் மியான்மரின் பழைய வீடியோ !

முடிவு:

நம் தேடலில், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற உள்ளூர் பாஜக நிர்வாகிகளை மக்கள் விரட்டும் காட்சி எனப் பரவி வரும் வீடியோ மணிப்பூரில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 2017ன் போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க