
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
மோடிக்கு ஓட்டுப் போட்ட இந்த விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டு ஓட்டு போட்ட அந்த விரலை வெட்டி எடுக்கும் மானஸ்த்தன் வடக்கன். pic.twitter.com/vc78vO9Cyx
— Manikandan (@Manikan11802560) March 29, 2024
அந்த வீடியோவில், ஒருவர் தனது இடது கையிலுள்ள ஆள்காட்டி விரலை, பெரிய கத்தியைப் பயன்படுத்தி அறுப்பதையும், பின்னர் அதிலிருந்து இரத்தம் வழிவதையும் தெளிவாக பார்க்க முடிகிறது.
மாத்திரை அளவு முத்தி போயி வடக்கனே திருந்திட்டான் போல
(((*மோடிக்கு ஓட்டுப் போட்ட இந்த விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டு ஓட்டு போட்ட அந்த விரலை வெட்டி எடுக்கும் மானஸ்த்தன் வடக்கன்.*)))) pic.twitter.com/Sbr9MS03pQ
— manianandan2011 (@manianandan2011) March 29, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், இந்த வீடியோ கடந்த 2023 ஆகஸ்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
A man named Pawan Kumar cut off his own finger after accidentally voting for the BJP in the elections.#india pic.twitter.com/u4X222r5pc
— Taufik Pathan % Follow Back (@taufikpathan1) August 19, 2023
Free Press Journal ஊடகத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, கடந்த 2023 ஆகஸ்ட் 19 அன்றே "தானே: ஒவ்வொரு வாரமும் ஒரு உடலின் பாகத்தை வெட்டுவேன் என்று மிரட்டி & அரசுக்கு அனுப்புவதாகக் கூறும், ஒரு நபர் தனது விரலை வெட்டுவது போன்ற வீடியோ வைரல்; 4 பேர் கைது " என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், "பிரதமர் நரேந்திர மோடிக்கும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் காணிக்கையாக தனஞ்சய் நானாவரே என்ற நபர் தனது ஆள்காட்டி விரலை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது சகோதரர் நந்த்குமார் நானாவரே மற்றும் அவரது மனைவி உஜ்ஜவாலா நானாவரே ஆகியோரின் தற்கொலை வழக்கில் காவல்துறையின் மந்தமான நடவடிக்கையின் காரணமாக இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மேலும் இறந்தவர்களின் தற்கொலைக் குறிப்பில் நான்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே செய்தி Hindustan Times இன் பக்கங்களிலும் 2023 ஆகஸ்ட்19 அன்று, "தற்கொலை விவகாரத்தில் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்து ஒருவர் விரலை அறுத்துக்கொண்ட நிலையில் முதல்வர் களம் இறங்கினார்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

இதன் மூலம் தனது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி, மாகராஸ்டிராவைச் சேர்ந்த தனஞ்சய் நானாவரே என்பவர் தனது விரலை வெட்டிக் கொண்ட வீடியோவை, பிரதமர் மோடியின் கட்சிக்கு ஓட்டு போட்டதற்காக விரலை வெட்டிக் கொண்ட வட இந்தியர் என்று கூறி சிலர் தவறாகப் பரப்பி வருவதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டாரா ?
முடிவு:
நம் தேடலில், பிரதமர் மோடிக்கு ஓட்டு போட்டதற்காக விரலை வெட்டிக் கொண்ட வட இந்தியர் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.