YouTurn

ராகுல்காந்தியின் பேரணி எனப் பரவும் மகாராஷ்டிராவின் மாட்டுப் பந்தய வீடியோ!

ராகுல்காந்தியின் பேரணி எனப் பரவும் மகாராஷ்டிராவின் மாட்டுப் பந்தய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நடத்தும் "வாக்காளர் அதிகார நடைபயணம்" எனப் பரவும் வீடியோ, பெட்கானில் உள்ள ஹிந்த்கேசரி மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தின் (ரேக்ளா பந்தயம்) போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நடத்தும் "வாக்காளர் அதிகார நடைபயணம்"  மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்! - லாலு பிரசாத்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக அரசுடன் சேர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாகவும் கூறி வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியிருந்தார். 


குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதே போன்று வாக்காளா் பட்டியல் குளறுபடிக்கு எடுத்துக்காட்டாக பீகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் மிந்தா தேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று குறிப்பிடப்பட்டதையும் அவா் சுட்டிக்காட்டியிருந்தார். 


இதைத்தொடர்ந்து தற்போது பீகாரில் ராகுல்காந்தி வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராகுல்காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு கூட்டமாக மக்கள் திரண்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர். 




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது ராகுல்காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Love_bailgada_sharyat” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ கடந்த ஜூன் 23 அன்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ராகுல்காந்தி தனது வாக்குரிமை பேரணியை தொடங்குவதற்கு முன்பே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by ☣️🔰⚜️ लव बैलगाडा शर्यत ⚜️🔰☣️ (@love_bailgada_sharyat)


மேலும் இதே வீடியோ, மகாராஷ்டிரா மாநிலத்தில், அமைந்துள்ள பெட்கானின் ஹிந்த்கேசரி மைதானத்தில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தின் (ரேக்ளா பந்தயம்) போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு யூடியூப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 



இதனை நாம் கூகுள் மேப்பில் ஹிந்த்கேசரி மைதானம் என்று குறிப்பிட்டு, அதில் உள்ள புகைப்படங்களின் மூலமும் உறுதி செய்துள்ளோம்.



முடிவு: 


நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிந்த்கேசரி மைதானத்தில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணி என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க