யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
மேகி (Maggie) கம்பெனி இப்போது சிக்கன் நூடுல்ஸில் மட்டும் தான் நாங்கள் பன்றிக் கொழுப்பு கலக்கிறோம், வேறு எதிலும் எந்த விலங்கின் Animal Fats ம் கலப்பது கிடையாது என்று உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

Instagram Link:

Instagram Link:
விரிவான விளக்கம்
மேகி (Maggi) நூடுல்ஸின் சிக்கன் நூடுல்ஸில் பன்றிக் கொழுப்பு கலக்கிறோம், வேறு எதிலும் எந்த விலங்கின் Animal Fats ம் கலப்பது கிடையாது என்று உயர்நீதிமன்றத்தில் மேகி (Maggie) கம்பெனியே சொல்லியிருக்கிறார்கள் என்று கூறி வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் மற்றொரு வீடியோவிலும் இதே போன்று மேகி நூடுல்ஸ் மற்றும் மசாலாவில் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்று கூறி deepakthakranfitness என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக அதில் சேர்க்கப்படும் E635 என்ற பிளேவரில் தான் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மேகியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQS) என்ற பகுதியில், மேகியில் பன்றி கொழுப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸில் பன்றிக் கொழுப்பு/பன்றி இறைச்சி இல்லை. 2 நிமிட நூடுல்ஸ் வரிசையின் கீழ் கிடைக்கும் மேகியின் அனைத்து நூடுல் வகைகளும் முற்றிலும் சைவ உணவு வகைகளாகும். மேகி சிக்கன் நூடுல்ஸ் மட்டும் அசைவ வகை" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, மேகியில் சேர்க்கப்படும் E635 என்ற பிளேவரில் தான் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் பரவுவதால், இது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். மேகியின் அதே அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அதில், "E635 என்றால் என்ன? என்ற கேள்விக்கு, "E635, மேகி நூடுல்ஸில் சுவையை அதிகரிக்க செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் சைவம் மற்றும் பீட்ரூட் மற்றும் ஈஸ்ட் சாற்றைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் மேகி நூடுல்ஸ் மற்றும் அதில் கலக்கப்படும் E635 என்ற சுவையூட்டியில் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக கடந்த 2019 இல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரப்பப்படுகிறது என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: “பார்கோடு எண் 729” தயாரிப்புகளைப் புறக்கணியுங்கள், அவை இஸ்ரேலிய பொருட்கள் எனப் பரவும் தவறான தகவல் !
முடிவு:
நம் தேடலில், மேகி நூடுல்ஸில் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.