யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘பாகிஸ்தானில் இந்திய ரூபாய்’ என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. இரண்டு சிறுவர்கள் கைகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளுடன் இருப்பது போன்று பரவும் இந்த வீடியோ லக்னோவில் எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
பாகிஸ்தானில் நம் நாட்டுப் பணம். இப்போது புரிகிறதா பாரத பிரதமர் மோடி ஜி பணம் செல்லாது என்று அறிவித்தது ஏன் என்று..
விரிவான விளக்கம்
பாகிஸ்தானில் இரண்டு சிறுவர்கள் 500 ரூபாய் இந்திய ரூபாய் நோட்டுக்கட்டுகளுடன் இருப்பதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பலரும், “பிரதமர் மோடி அவர்கள் இதனால் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்” என்று கூறி பரப்பி வருவதையும் காண முடிகிறது.
பாகிஸ்தானில் இந்திய ரூபாய் நோட்டு ரூபாய் நோட்டுகள்..
மோடி ஏன் பணமதிப்பிழப்பு செய்தார் என்று காங்கிரஸ் கேட்கிறது.. pic.twitter.com/psmVJkyj8v
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “brijeshmishra809gonda” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
கடந்த ஜனவரி 02 அன்று “வைரலான வீடியோவில் உள்ள குழந்தைகளை சந்தித்தேன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள இரண்டு குழந்தைகள் அவருடன் இருப்பதைக் காண முடிந்தது. அதில் பேசியுள்ள பிரிஜெஷ், “சிறுவர்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, உத்தரபிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மிகவும் ஏழைகள் என்றும” பேசியுருப்பதைக் காண முடிந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதே போன்று பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு மற்றொரு வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜனவரி 02 அன்று பதிவு செய்துள்ளார். அவ்வீடியோவில் பரவி வரும் வீடியோவில் உள்ள சிறுவர்களின் தாய் மற்றும் தந்தையுடன் அவர் பேசுவதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைகள் என்று கூறிக்கொள்வது குறித்து நிறைய தவறான தகவல்கள்பரவுகின்றன, ஆனால் உண்மையில், அவர்கள் அசாமில் இருந்து வந்தவர்கள், லக்னோவுக்கு குடிபெயர்ந்தவர்கள், தற்போது லக்னோவில் வசிக்கிறார்கள் என்றும் அவர் தொடர்ந்து கூறியிருப்பதைக் காண முடிகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவிலும், அவர் உறுதி செய்திருப்பதைக் காண முடிகிறது.
இதன மூலம் பரவி வரும் வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ‘பாகிஸ்தானில் இந்திய ரூபாய்’ என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இரண்டு சிறுவர்கள் கைகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளுடன் இருப்பது போன்று பரவும் இந்த வீடியோ லக்னோவில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.