யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் மது பாட்டில் விநியோகிக்கப்பட்டதாக பரவும் செய்தி தவறானவை. பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு டிசம்பர் 29 அன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மாநாட்டில் பங்கேற்க வந்த பெண் தொண்டர்களுக்கு ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையில் மதுபானம் இடம்பெற்றிருந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதாண்டா திமுக @Arivalayam ! 🔥 pic.twitter.com/6Yqlumt9qA
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் இந்த செய்தியை தேடிப் பார்த்தோம். அப்போது News 18 Tamilnadu ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 10 வகையான ஸ்நாக்ஸ் அடங்கிய பை திமுக மகளிர் மாநாடு இருக்கையில் வைத்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு’ என்று குறிப்பிட்டு வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் எங்கும் மதுபாட்டில் விநியோகிக்கப்பட்டது குறித்து சொல்லவில்லை.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
அதே போல் விகடன் ஊடகத்தில், “பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!” என்ற தலைப்பில் மாநாடு குறித்து செய்தி வெளியாகிருந்தது. அதில் அங்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அங்கு மது பாட்டில் இருந்ததற்கான எந்த காட்சியும் இல்லை.

இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கலாமோ சந்தேகம் எழுந்தது. இது குறித்து தேடிய போது, Navaneeth என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தின், உண்மையான புகைப்படம் இருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து பரவி வருவது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது.

ஏற்கனவே, திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டதாக புகைப்படம் பரவியது. இது குறித்து அப்போதே FactCheck செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் மது பாட்டில் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் மது பாட்டில் விநியோகிக்கப்பட்டதாக பரவும் செய்தி தவறானவை. பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
