YouTurn

விமான விபத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த பணியாளர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

விமான விபத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த பணியாளர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டது ஜூன் 12. ஆனால், ஜூன் 9 அன்றே, 'யாஷஸ்வி ஷர்மா' என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோவை "ULH விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஊக்கமாக உள்ளோம்" என்று குறிப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பரவிய செய்தி

AI 171 - விமானத்தில் ஏறுவதற்கு முன் ஏர் இந்தியா குழுவினர்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ’ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


உண்மை என்ன? 

பரவி வரும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது யாஷ்ஸ்வி ஷர்மா என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோ, "ULH விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஊக்கமாக உள்ளோம்" என்று குறிப்பிட்டு, ஜூன் 9 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அதுமட்டுமில்லாமல், அந்த பதிவின் comment பகுதியில் ”தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், மும்பையில் இருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார். 


இதையடுத்து அவர் ஜூன் 9ஆம் தேதியன்று பதிவிட்ட வீடியோவை,  அகமதாபாத் விபத்துடன் தொடர்புபடுத்தி பரப்பப்படுவதை கண்டித்து “போலியான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


விபத்தில் பலியான ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் குறித்த விவரங்கள் Times Of Indiaவின் ஊடகப்பக்கத்தில் வெளியாகி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் யாஷ்ஸ்வி ஷர்மாவின் பெயர் இடம்பெறவில்லை என்பதை காணமுடிந்தது. 


முடிவு: 

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டது ஜூன் 12. ஆனால், ஜூன் 9 அன்றே, 'யாஷஸ்வி ஷர்மா' என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. எனவே இந்த வீடியோவிற்கும், அகமதாபாத் விமான விபத்திற்கும எந்த தொடர்புமில்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க