யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது குஜராத்தில் நடந்த சம்பவம் அல்ல, கொல்கத்தாவில் கடந்த 2022-ல் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.
பரவிய செய்தி
குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற தொகையை எண்ண முடியாததை கண்டு அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, கூடுதல் எண்ணும் இயந்திரத்தையும் கொண்டு வர வேண்டியதாயிற்று. ஊழலை துடைக்க துடைப்பத்துடன் வெளியே வந்தவர்கள் நோட்டுகளை மாற்றுகிறார்கள்.

விரிவான விளக்கம்
குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி 36 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அப்பதிவில் “அமலாகத்துறையினர் சோதனை நடத்தியதில் பெற்ற தொகையை எண்ண முடியாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, கூடுதல் எண்ணும் இயந்திரத்தையும் கொண்டு வர வேண்டியதாயிற்று. ஊழலை துடைக்க துடைப்பத்துடன் வெளியே வந்தவர்கள் நோட்டுகளை மாற்றுகிறார்கள்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2022-இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
#NIA in #PFI office in #Kerala 😮😮😮 pic.twitter.com/M2DWAS5Lhb
எனவே, இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், பரவி வரும் இதே வீடியோவை, “CNN-News18” தனது யூடியூப் பக்கத்தில், “கொல்கத்தாவில் அமலாக்கத்துறை மெகா ரெய்டு நடத்தி ₹18 கோடி பணத்தை மீட்டது | வைரல் வீடியோ | ஆங்கில செய்திகள்” என்றி குறிப்பிட்டு கடந்த 2022 செப்டம்பர் 11 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இது குஜராத்தில் நடந்த சம்பவம் அல்ல, கொல்கத்தாவில் கடந்த 2022-ல் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து அமலாக்கத்துறையினர், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மொபைல் கேமிங் பயன்பாடு தொடர்பான விசாரணை தொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள 06 இடங்களில் PMLA, 2002 (10.09.2022 அன்று) இன் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரூ.17.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 2022 செப்டம்பர் 12 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ED has carried out search operations under PMLA, 2002 (on 10.09.2022) at 06 premises in Kolkata, in respect to an investigation relating to the Mobile Gaming Application. Cash amounting to Rs 17.32 Cr has been seized
மேலும் இதே போன்று, “Times of India” பக்கத்திலும் கடந்த 2022 செப்டம்பர் 12 அன்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “கொல்கத்தாவைச் சேர்ந்த “E-Nuggets” மொபைல் கேமிங் செயலி நிறுவனத்தை சேர்ந்தவர்களை அமலாக்க இயக்குநரகம் சோதனை செய்தது. சோதனை செய்ததில் சுமார் ரூ.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியதாகக் கூறி பரவும் வீடியோ, கொல்கத்தாவில் கடந்த 2022 இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.