YouTurn

கேரள குண்டுவெடிப்பை இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தவறான தகவல் !

கேரள குண்டுவெடிப்பை இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹமாஸின் முன்னாள் தலைவர் கலேத் மெஷால்'லை மலப்புரத்தில் பாலஸ்தீனியத்தை ஆதரித்து நடந்த பொதுகூட்டத்தில் ஆன்லைனில் பேச வைத்து அவன் பேசிய ஓரிரு நாட்களில் யூதர்களின் மேலான தாக்குதலாக இந்த வெடிகுண்டு நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Twitter Link


விரிவான விளக்கம்

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் நேற்று 2000 பேர் கலந்துகொண்ட கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக்கூட்டத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 27 அன்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான காலித் மஷால் கலந்துகொண்டார். இந்த கூட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே கேரளாவில் உள்ள யூதர்களின் மீதான தாக்குதலாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறி சரவணபிரசாத் உட்பட வலதுசாரிகள் பலரும் இதை இஸ்ரேல் பாலஸ்தீனப் போருடன் தொடர்புபடுத்தி பரப்பி வருகின்றனர்.





Archive Link

மேலும் தமிழ் பொக்கிஷம் யூடியூப் சேனலை நடத்திவரும் விக்னேஸ்வரன் போன்ற பலரும் இந்த சம்பவத்தின் விசாரணை முடிவடைவதற்கு முன்பே இதை கேரளாவில் காலித் மஷால் பேசிய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிராக உள்ளனரோ என்று தொடர்புபடுத்தி வீடியோவையும் வெளியிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கேரள சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியான எம்.ஆர். அஜித் குமார் இந்த சம்பவம் குறித்து பேசிய வீடியோ கிடைத்தது. அதில் பேசிய அவர், "திருச்சூர் கிராமத்தில் உள்ள கோடாக்ரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவரது பெயர் டொமினிக் மார்ட்டின், அவர் அந்த சபையின் ஒரே குழுவைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். நாங்கள் அதைச் சரிபார்த்து வருகிறோம். இந்த வழக்கில் இது தொடர்பான அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த குண்டுவெடிப்பு  சம்பவம் மண்டபத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்துள்ளது" என்று பேசியுள்ளார்.



இது தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள வாக்குமூல வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், "என் பெயர் மார்டின், இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். அங்கு குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன் நான் தான்." என்று கூறி பேசியுள்ளார்.



டொமினிக் மார்ட்டின் பேசியது தொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில்" நான் 16 வருடங்கள் அந்த சபையில் ‘தீவிரம் இல்லாத’ ஒரு உறுப்பினராக இருந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் போதனைகள் 'தேச விரோதமாக' இருப்பதைக் கண்டேன். வகுப்புத் தோழர்கள் வழங்கும் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களை மறுக்குமாறு அவர்கள் குழந்தைகளை அறிவுறுத்தினர். இந்த வகையான பிரசங்கத்தை நிறுத்துமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன், மதத்தின் தலைமை அதற்கு செவிசாய்க்க மறுத்தது. அவர்கள் தங்கள் சபை உறுப்பினர்களை தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் குழந்தைகள் உள்பட மக்களின் மனதில் விஷத்தை செலுத்துவதற்கு சமமானதாக இருந்தது.

வயதுவந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டாம் என்றும் சிவில் அல்லது இராணுவ சேவையில் சேர வேண்டாம் என்றும் அவர்களால் கூறப்பட்டது. அவர்கள் மற்றவர்களுக்கு நோய் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் தவிர மற்றவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் கற்பிக்கிறார்கள். இத்தகைய போதனைகள் சமூகத்திற்கு ஆபத்தாக இருப்பதைக் கண்டறிந்ததால் தான் நான் எதிர்வினை செய்ய வேண்டியிருந்தது." என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதன் மூலம், குண்டுவெடிப்பு நடந்தது யூதர்கள் மீதான தாக்குதல் அல்ல, ஜெஹோவா கிறிஸ்தவ சபை மீது நடந்துள்ளது. அதே ஜெஹோவா கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறி அவராகவே வாக்குமூலம் அளித்து சரணடைந்துள்ளார் என்பதையும், இது தொடர்பாக காவல்துறையினாரால் மேலும் விசாரணை நடந்து வருவதையும் அறிய முடிகிறது.

முடிவு :

நம் தேடலில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் யூதர்களுக்கு எதிராக நடந்துள்ளது என்றும், இதற்கு காரணம் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான காலித் மஷால் கலந்துகொண்டது தான் என்றும் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க