யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரளாவில் புதிய பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரளாவில் புதிய பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
கேரளாவில் புதிய பேருந்துகள் pic.twitter.com/LNvlfYqFUH
உண்மை என்ன?
உண்மையில் கேரளாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பேருந்துகளில் தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தால் அது குறித்து, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் எந்தவொரு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியாகவில்லை.
இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது open mallu. ai என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் New bus interior என்று குறிப்பிட்டு ஜனவரி 22, 2026 அன்று பரவி வரும் புகைப்படத்தின் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த வீடியோவில் spectoria ai மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதை தெளிவாக காணமுடிந்தது.
இதையடுத்து அந்த இன்ஸடாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தி பார்த்தோம். அப்போது Description-ல் Powering content with AI என்று குறிப்பிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் அந்த பக்கத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் இருந்ததையும் பார்க்கமுடிந்தது.

இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : பூ கட்டும் மெஷின் என்று பரவும் AI வீடியோ!
சினிமா படப்பிடிப்பு என்று AI வீடியோவை பரப்பும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!
முடிவு:
எனவே, கேரளாவில் புதிய பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
