YouTurn

குஜராத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எனப் பரவும் பாலக்காடு எம்எல்ஏவின் பிரச்சார வீடியோ !

குஜராத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எனப் பரவும் பாலக்காடு எம்எல்ஏவின் பிரச்சார வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

குஜராத்தில் ராகுல் காந்தியின் தெரு முனை பிரச்சாரம்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 6700 கி.மீட்டர் தூரம் கொண்ட 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' நடை பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14 அன்று தொடங்கினார். பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் 14 மக்களவை தொகுதிகளை உள்ளிடக்கிய தனது நடைபயணத்தை கடந்த வியாழன் (மார்ச் 07) அன்று தொடங்கினார்.



இந்நிலையில் குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனைப் பிரச்சாரத்தைப் பாருங்கள் என்று கூறி 12 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கார் ஒன்று நடுவில் செல்வது போலவும், அந்தக் காரைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக, காங்கிரஸ் கொடியுடன் சேர்த்து, பல வண்ணக் கொடிகளுடன் திரண்டு இருப்பதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது ராகுல் காந்தி குஜராத்தில் நடைபயணம் மேற்கண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

Manorama News என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழு வீடியோ மார்ச் 10 அன்று "தேர்தலுக்காக; வடகரையை அதிர வைத்த ஷாஃபி பரம்பில் | ஷாஃபி பரம்பில் | வடகரை" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது.






எனவே பரவி வரும் செய்திகள் குறித்து மேலும் தேடியதில், "வடகரையில் UDF வேட்பாளர் ஷாபி பரம்பிலுக்கு அமோக வரவேற்பு" என்ற தலைப்பில் "The Hindu" மார்ச் 10 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரா மக்களவைத் தொகுதியில் மார்ச் 10 அன்று பாலக்காடு எம்எல்ஏவும், ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வேட்பாளருமான 'ஷாபி பரம்பில்' தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். வடகரை பேருந்து நிலையத்தில் இருந்து அரசியல் மாநாடு நடைபெற்ற கோட்டப்பறம்பு மைதானத்திற்கு பிரமாண்ட ஊர்வலமாகத் திறந்த வாகனத்தில் பரம்பில் அழைத்துச் செல்லப்பட்டார்.


.

பின்னர் ஷாபி பரம்பில் பங்கேற்கவுள்ள அரசியல் மாநாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி தொடங்கி வைத்தார். ஷாபி பரம்பிலுக்கு எதிராக வடகரா மக்களவைத் தொகுதியில் ஏற்கனவே எல்.டி.எப் வேட்பாளரும், மட்டனூர் எம்.எல்.ஏவுமான கே.கே.ஷைலஜா தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.






மேலும் கேரளாவின் வடகரா மக்களவைத் தொகுதியில் UDF கட்சியின் வேட்பாளரான 'ஷாபி பரம்பில்' பிரச்சாரத்தில் ஈடுபட்ட மார்ச் 10 அன்று, ராகுல் காந்தியும் குஜராத் மாநிலம் சூரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதை செய்தியின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், பரவக் கூடிய வீடியோ அக்கூட்டத்தில் எடுத்தது இல்லை.

மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

மேலும் படிக்க: ராகுல் காந்தி பூணூலைக் காட்டி கவுல் பிராமணன் எனக் கூறியதாக சீமான் சொன்ன பொய் !

முடிவு:

கேரளாவின் வடகரா மக்களவைத் தொகுதியில் UDF கட்சியின் வேட்பாளரான 'ஷாபி பரம்பில்' தனது பிரச்சாரத்தைத் தொடங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை, குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனைப் பிரச்சாரம் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க