யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் இனி அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் AC வசதியுடன் மட்டுமே வாங்கப்படும் என்றே போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த செய்தியை ‘Karnataka Times’ ஊடகம் தவறாகத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
According to reports, CM Vijay has approved complete AC bus services for Tamil Nadu. The initiative aims to improve comfort for people using public transport. The move has received public attention.

விரிவான விளக்கம்
"இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முழுமையாக AC பேருந்து சேவையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று ‘Karnataka Times’ ஊடகம் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
முதலில் இது குறித்து அரசு தரப்பில் இருந்து எதேனும் அதிகாரப்பூர்வ செய்தி வந்துள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் இப்படியான எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இது குறித்து மேலும் தேடியப் போது, Times Of India ஊடகத்தில் “AC-only buses part of CM Vijay's push to modernize public transport: Tamil Nadu Transport minister Parthiban” என்ற தலைப்பில் ஜூன் 30, 2026 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாட்டில் இனி அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் AC வசதியுடன் மட்டுமே வாங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை தான் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முழுமையாக AC பேருந்து சேவையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் விஜய் ஒப்புதல் என்று ‘Karnataka Times’ ஊடகம் தவறாகத் திரித்து
வெளியிட்டுள்ளது.
முடிவு:
எனவே, "இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முழுமையாக AC பேருந்து சேவையை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று ‘Karnataka Times’ ஊடகம் வெளியிட்ட செய்தி
தவறானவை.