யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ அறிவித்ததாக பரவும் அறிக்கை போலியானது. உண்மையான அறிக்கையில் 75 சதவீதத்துக்கு கீழ் வருகைப்பதிவு இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.
பரவிய செய்தி
Jamia Millia Islamia issues notice outlining restrictions on student behavior on campus during Ramadan.

விரிவான விளக்கம்
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக கூறி அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அதில் ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நிற்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை ஆணும் பெண்ணும் சேர்ந்து நிற்பது கண்டறியப்பட்டால் அவ்விருவருக்கும் உடனடியாக நிக்கா செய்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Is it a university or a marriage agency?
Who gave them the right to do moral policing?@dpradhanbjp @EduMinOfIndia pic.twitter.com/EF1dYlsqOv
உண்மை என்ன?
பரவி வரும் அந்த அறிக்கையில் தேதி ‘20/02/2026’ என்று இருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் கீழே துணை பதிவாளர் கையொப்பம் ‘20/01/2026’ தேதியுடன் இருந்தது.

இதையடுத்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் வைரலாகும் அறிக்கை குறித்து தேடினோம். அப்போது ஜனவரி 20, 2026 அன்று வைரலாகும் அறிக்கையிலிருந்த C&O- 9(2)/RO/2026 என்ற எண்ணுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் 75 சதவீதத்து கீழ் வருகைப்பதிவு இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது, பரவி வரும் அறிக்கை எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது தெளிவானது.

இது குறித்து மேலும் தேடிய போது, பிப்ரவரி 24, 2026 அன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது. அதில் “ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நிற்பது கண்டறியப்பட்டால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற எந்த உத்தரவையும் பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிடவில்லை.இதுக்குறித்து டெல்லி சைபர் போலீஸில் பல்கலைக்கழகம் புகார் அளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ அறிவித்ததாக பரவும் அறிக்கை போலியானது. உண்மையான அறிக்கையில் 75 சதவீதத்துக்கு கீழ் வருகைப்பதிவு இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.