யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 2026 ஜனவரியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இனிமே சட்டம் தன் கடமையை செய்யும்... 💯🔥@TVKVijayHQ 🔥
With... TN Police power... 🫡 pic.twitter.com/uPhRpxVGbg
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது NT News ஊடக்கத்தில் ஜனவரி 01, 2026 அன்று “ஜெய்ப்பூர்: மது போதையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் — PCR வாகனம் வந்ததும் பெரும் குழப்பம்” என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது பார்க்கமுடிந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026-ஆம் ஆண்டின் வருகையை மது அருந்தி கொண்டாட மதுகடைக்கு வெளியே மக்கள் திரண்டிருந்தனர். அப்போது காவல் ரோந்து வாகனம் வருவதை கண்டு அனைவரும் கலைந்து ஓடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியப் போது, Jaipur Highlights என்ற instagram பக்கத்திலும் இதே வீடியோ பதிவாகியிருந்தது. அதிலும் ஜெய்ப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போலீசார் வருகையை கண்டதும் அனைவரும் சிதறி ஓடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று பரவி வரும் வீடியோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 2026 ஜனவரியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை தமிழ்நாட்டில் எடுத்த வீடியோ என்பது போல் தவெகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
