YouTurn

'பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி' அணிந்து கேரளாவில் அலுவலகம் திறக்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்தி!

'பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி' அணிந்து கேரளாவில் அலுவலகம் திறக்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராகுல் காந்தி தொகுதியில் கேரளாவில் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜெர்சி அணிந்து கேரளா காசர்கோடு லீக் அலுவலகம் திறப்பு. நாளை நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் என்றால் இவர்கள் யாருக்கு துணையாக இருப்பார்கள் என்று யோசித்துபாருங்கள் என்ன கொடுமை இந்த நாட்டில் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்துள்ளது.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

காங்கிரஸ் மூத்தத் தலைவரான ராகுல்காந்தியின் தொகுதி அமைந்துள்ள கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் 'பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி' அணிந்து அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குழுவாக இருப்பது போன்ற 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் அப்பதிவுகளில், "நாளை நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் என்றால் இவர்கள் யாருக்கு துணையாக இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். என்ன கொடுமை இந்த நாட்டில் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்துள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், பச்சபடா அரங்கடி (Pachapada Arangadi) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் வீடியோ ஜூன் 28 அன்று "அரங்கடி (Arangadi)" என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.



மேலும் அதே பச்சபடா அரங்கடி (Pachapada Arangadi) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள மற்றொரு வீடியோவிலும், இளைஞர்களும் குழந்தைகளும் கூட்டமாக பச்சைநிற டிசர்ட் அணிந்து கூட்டமாக செல்வதைக் காணமுடிகிறது.



எனவே இவர்கள் அணிந்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி தானா என்பது குறித்து, கீழே உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி உடையுடன் ஒப்பீடு செய்ததில், இரண்டும் வெவ்வேறானவை என்பதை உறுதி செய்யமுடிந்தது.  



மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை நன்கு ஆய்வு செய்ததில், ‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்’ (IUML) மற்றும் ‘முஸ்லீம் யூத் லீக்’ (MYL) போன்ற கட்சிகளின் சின்னங்களை குறிக்கும் வகையிலேயே டிசர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது. 

டிசர்ட்டின் முன்பக்கத்தில் முஸ்லீம் லீக்கின் சின்னம் மற்றும் லோகோவுடன், அரங்கடி (Arangadi) என்று ஆங்கிலத்தில் பெரியதாகவும், பின்புறத்தில் பச்சபடா அரங்கடி (Pachapada Arangadi) என்று மலையாளத்திலும் எழுதப்பட்டிருந்தன. இதே போன்று ஜெர்சியின் வலது கையில் 'IUML' என்றும், இடது கையில் 'MYL' என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. 



இதன்மூலம் பச்சைநிற ஜெர்சியை பார்த்ததும், இதை பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி என்று சிலர் தவறாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

மேலும் படிக்க: வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தியதாகப் பரப்பப்படும் வதந்தி !

இதற்கு முன்பும் பாகிஸ்தான் கொடியுடன் தொடர்புபடுத்தி சிலர் தவறான செய்திகளை பரப்பி வந்தனர். அப்போதே இதுகுறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: லுலு மாலில் இந்தியக் கொடியைவிடப் பாகிஸ்தான் கொடி பெரியதாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !

முடிவு:

நம் தேடலில், 'பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி' அணிந்து கேரளாவில் அலுவலகம் திறக்கப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க