யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Wireless Ear Pads போன்ற Bluetooth கருவிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலில் பாரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை.
பரவிய செய்தி
ஒயர்டு இயர்போன்களை விட ப்ளூடூத் ஏர்பாட்கள் 150 மடங்கு அதிக கதிர்வீச்சை வெளியிடுகின்றன. மூளைக்கு மிக அருகில் நீண்ட நேரம் புளூடூத் அலைகள் இருப்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம். பாதுகாப்பிற்கு ஒயர்டு (Wired) இயர்போன்களைப் பயன்படுத்துவதே சிறந்தது!

விரிவான விளக்கம்
தொடுபேசி பயன்பாடு அதிகரித்ததோடு அதில் பயன்படுத்தப்படும் Earphones என்ற கருவியின் பயன்பாடும் அதிகரித்தது. ஆரம்ப காலத்தில் Wired Earphones பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது Bluetooth முறையில் பயன்படுத்தப்படும் Wireless Ear Pads பிரபலமாக இருக்கிறது.
இந்நிலையில், Wireless Ear Pads பயன்படுத்தும் போது Wired Earphones-ஐ காட்டிலும் 150 மடங்கு அதிக கதிர்வீச்சு (Radiation) வெளிப்படுவதாகவும், இதனால் இதனை அதிக நேரம் பயன்படுத்தும் போது பயனர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு உண்டாகும் என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மையா...!? pic.twitter.com/Dik7Lh1fmO
உண்மை என்ன?
Bluetooth முறையில் இயங்கும் Wireless Ear Pads வெளியிடும் கதிர்வீச்சு குறித்த தகவல்களை தேடினோம். ’MEDICAL NEWS TODAY’ என்ற இணையதளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் Bluetooth முறையில் இயங்கும் கருவிகள் வெளியிடுவது அயனியாக்காத கதிர்வீச்சு (Non-ionizing Radiation) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அயனியாக்கும் கதிர்வீச்சு (Ionizing Radiation) என்பது அதிக அதிர்வெண் (High Frequency) கொண்ட கதிர்வீச்சு ஆகும். இதனால், அது அணுக்களில் உள்ள எலட்ரான்களை நீக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனால் அது மனித உடலுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அயனியாக்காத கதிர்வீச்சு என்பது குறைந்த அதிர்வெண் (Low Frequency) கொண்டது. இதனால் உடலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது.

மேலும் ‘Doctor Guide Online’ என்ற இணையதளத்தில் உள்ள கட்டுரையின் படி, Bluetooth கருவிகள் வெளியிடும் அயனியாக்காத கதிர்வீச்சு, உயிரினங்களில் உள்ள மூலக்கூறுகளில் உள்ள இணைப்புகளை (Bonds) உடைக்கும் அளவிற்கோ அல்லது மரபணு மீது பாதிப்பு (DNA Damage) ஏற்படுத்தும் அளவிற்கோ வலுவானது அல்ல. இதனால் Bluetooth கருவிகளிலிருந்து வெளிப்படும் அயனியாக்காத கதிர்வீச்சு மனிதனின் தீசுக்களில் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை.

அதேபோல், செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக மூளையில் புற்றுநோய் ஏற்படுவதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்று உலக சுகாதார நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முடிவு:
Wireless Ear Pads போன்ற Bluetooth கருவிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக தவறான தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.