YouTurn

பீகாரில் தேர்தல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

பீகாரில் தேர்தல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று அசாமிய பாடகர் ஜுபீன் கார்க்-ன் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது

பரவிய செய்தி

பீகார் தேர்தல் தில்லுமுல்லை கண்டித்து தேர்தலுக்கு பிறகு தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டம்... நாடுமுழுவதும் பரவட்டும் பாசிசத்திற்கு எதிரான இந்த போராட்டம்


image.png


X Link / Archive Link

விரிவான விளக்கம்

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த  நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகள் இரண்டு கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து நவம்பர் 14ஆம் தேதி வெளியான தேர்தல் முடுவுகளின் படி, பாஜக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றது. 


இந்நிலையில், ஒரு நகரத்தின் தெருவில் மக்கள் பெருங்கூட்டமாக சென்று கொண்டிருக்கும் வீடியோவை பதிவிட்டு, ‘பீகார் தேர்தலில் நடந்த முறைகேடுகளை கண்டித்து தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவிற்கு எதிராக பீகார் மக்கள் நடத்தும் போராட்டம்’ என்று இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த தடா ரஹிம் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார். 

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ’India Timesஎன்ற யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ’பாடகர் ஜுபீன் கார்க் என்பவருக்கு குவஹாத்தியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதேபோல் ‘Prahlad Maharia’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த வீடியோவை பகிர்ந்து, ’மறைந்த பாடகர்  ஜுபீன் கார்க்-க்கு அசாம் மாநிலம் முழுவதில் இருந்தும் வந்த மக்கள் குவஹாத்தி நகரில் அஞ்சலி செலுத்தியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதுகுறித்து தேடியபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பாடகர் ஜுபீன் கார்க் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூரில் இறந்தார் என்றும் செப்டம்பர் 21ஆம் தேதி அவரது உடல் அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தி-க்கு கொண்டுவரப்பட்டு செப்டம்பர் 23ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் மூலமாக தெரிய வருகிறது. அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் பெருகூட்டமாக கலந்துகொண்டதாகவும் தெரியவருகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் வீடியோ கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று அசாமிய பாடகர் ஜுபீன் கார்க்-ன் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.


முடிவு:


அசாமிய பாடகர் ஜுபீன் கார்க்-ன் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, பீகாரில் தேர்தல் மோசடிகளுக்கு  எதிராக மக்கள் போராடி வருவதாக  தடா ரஹிம் சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க