YouTurn

சமாதியில் இருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடியதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

சமாதியில் இருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடியதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தனது தந்தையின் நினைவாக ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் செல்வதை திரித்து, சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை திருடியதாக தவறாக பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

காந்தி சமாதி மீது தூவப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை சுட்டு ஜோபில போட்டுக் கொள்ளும் அல்பயை. சமாதி மீதுள்ள காசையே சுடுபவன் நாளை இந்தியாவை ஆள நேர்ந்தால் மக்கள் கதி தமிழ்நாட்டை போல் தான்.


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

ராகுல் காந்தி ஏதோ ஒன்றை எடுத்து தனது பேண்ட் பையில் வைக்கும் வீடியோ துணுக்கை பதிவிட்டு, ‘ராஜீவ் காந்தி சமாதி மீது வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை திருடி ராகுல் காந்தி தனது பேண்ட் பையில் போட்டுக்கொள்கிறார்’ என்று சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில்,Live Hindustan’ என்ற யூடியூப் தளத்தில் இந்த செய்தி வீடியோவைக் காணமுடிந்தது. இந்த செய்தி கடந்த மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி இறந்த தினத்தன்று ராகுல் காந்தி நினைவஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்டது.


image.png


இந்த செய்தியில், ‘ராஜீவ் காந்தியின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்த சமாதியிலிருந்து தனது தந்தையின் நினைவாக ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் சென்றார்’ என்று தெளிவாக குறிப்பிடப்படுகிறது.


இதனை திரித்து, ராஜீவ் காந்தி சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை ராகுல் காந்தி திருடியதாக தவறாக பரப்புகிறார்கள். 


முடிவு:


தனது தந்தையின் நினைவாக ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் செல்வதை திரித்து, சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை திருடியதாக பாஜகவினர் தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க