YouTurn

திமுக MLA-களை சண்டைக்கு அழைத்தாரா பவன் கல்யாண்? உண்மை என்ன?

திமுக MLA-களை சண்டைக்கு அழைத்தாரா பவன் கல்யாண்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022 அக்டோபர் மாதம் YSR காங்கிரஸ் கட்சியிரை குறிப்பிட்டு பவன் கல்யாண் காட்டமாக பேசியது போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

"எத்தனை திமுக எம்எல்ஏ-க்கள் வர்றீங்களோ வாங்க, தோல உரிச்சு தொங்க விட்ருவேன்"

- ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் அவர்கள்


image.png


X Link / Archive Link


விரிவான விளக்கம்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் மேடையில் ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ’எத்தனை திமுக எம்எல்ஏ-க்கள் வேண்டுமானல் என்னுடன் மோத வாருங்கள்; தோல உரிச்சு தொங்க விட்ருவேன்’ என்று திமுகவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் பேசியதாக பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘RTV’ என்ற யூடியூப் தளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில் பவன் கல்யாண் மூன்று திருமணங்கள் செய்திருப்பது பற்றி எழுந்த விமர்சனம் குறித்து அவர் பேசிருப்பதாக அதன் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் இது குறித்து தேடியதில், ’Nav Bharat Times’ என்ற செய்தித்தளத்தில் 2022 அக்டோபர் மாதம் இது குறித்து வெளியான செய்தியை ஒன்றைக் காணமுடிந்தது. இதில், தன்னை "package star" என்று விமர்சித்த YSR காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு, ’அவ்வாறு தன்னை அழைப்பவர்களை செருப்பால் அடிப்பேன்’ என்று பவன் கல்யாண் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ’இதுவரை நீங்கள் என்னுடைய பொறுமையை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். கம்பி, ஹாக்கி கட்டை எதை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு சண்டைக்கு வாருங்கள்’ என்று பேசியதாகவும் தெரிய வருகிறது. 



அதேபோல், ‘The Hindu’ செய்தித்தளத்தில் 2022 அக்டோபர் மாதம் வெளியான செய்தியின் படி, ‘இத்தனை நாள் என்னுடைய பொறுமைதான்  உங்களைக் காப்பாற்றியது. என் ஒரு கையால் உங்களை என்னால் நெரிக்க முடியும். நீங்கள் என்னுடன் மோத விரும்பினாள், கம்பிகளோ, ஹாக்கி கட்டைகளோ அல்லது வெறும் கையிலோ எதுவானாலும் நான் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரின் தோலையும் உரிச்சிருவேன்’ என்று பேசியதாக தெரிய வருகிறது. 



இதிலிருந்து, பரப்பப்படும் வீடியோ கடந்த 2022 அக்டோபர் மாதம் பவன் கல்யாண் YSR காங்கிரஸ் கட்சியிரை குறிப்பிட்டு பேசியது என்பது தெளிவாக தெரியவருகிறது.


முடிவு:


YSR காங்கிரஸ் கட்சியிரை குறிப்பிட்டு பவன் கல்யாண் காட்டமாக பேசிய 3 ஆண்டுகள் பழைய வீடியோவை, திமுக MLA-களை குறிப்பிட்டு சண்டைக்கு அழைக்கும் விதமாக பேசியதாக தவறாக பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க