YouTurn

ராகுல் காந்தியை பீகார் மக்கள் துரத்தியடித்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ராகுல் காந்தியை பீகார் மக்கள் துரத்தியடித்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே-வின் வாகனத்தை மக்கள் துரத்தியடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ.

பரவிய செய்தி

பப்புவை விரட்டி அடித்த பிகார் மக்கள். பப்புவின் யாத்திரை ஓட ஓட விரட்டி அடித்த பிகார் மக்கள்.


X Link

விரிவான விளக்கம்

சைரன் பொருத்திய வாகனங்களை மக்கள் துரத்தியடிக்க, அவை அவசரமாக கிளம்பிச் செல்கின்றன. பாதுகாப்பிற்காக அதன் பின்னால் சில காவலர்கள் ஓடுகிறார்கள். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பீகார் மக்கள் விரட்டியடித்தனர்' என்று பாஜக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?

 

பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில் ‘Live Cities Media Private Limited’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ‘பாட்னாவின் அடல் பாத் என்ற பகுதியில் அமைச்சர் ஒருவர் விரட்டியடிக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டிருந்தது.


 

இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், ‘News 4 Nation’ என்ற செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.  கடந்த 25ஆம் தேதியன்று வெளியான இந்த செய்தியின் படி, ‘பீகாரின் மூத்த அமைச்சர் ஒருவர் அடல் பாத் பகுதியில் மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாக’ தெரியவருகிறது. மேலும், ‘ஒரு வாரத்திற்கு முன்னர் இந்திரபுரி என்ற பகுதியில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டு அவர்களது சடலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆனால் இன்னும் போலீஸார் கொலையாளியை கைது செய்யவில்லை. இவ்வாறு நீதி தாமதிக்கப்படுவதால் கோபமுற்ற மக்கள் இரண்டு தினங்களுக்கு முன்னால் அடல் பாத் சாலையை மறித்து தீ வைத்ததாகவும்’ இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.


 

இது குறித்து மேலும் தேடியதில், ‘Dainik Bhaskar’ என்ற இந்தி செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ‘கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் இரண்டு குழந்தைகள் கொலை  செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி அடல் பாத் என்ற பகுதியில் போராட்டம் நடந்தது. அப்போது அங்கே வந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே-வின் வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். போலீஸார் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்’ என்று தெரியவருகிறது.


 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இது பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே-வின் வாகனத்தை மக்கள் துரத்தியடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது.

 

முடிவு:

 

பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே-வின் வாகனத்தை மக்கள் துரத்தியடித்த வீடியோவை, பீகார் மக்கள் ராகுல் காந்தியை துரத்தியடித்ததாக பாஜக ஆதரவாளரால் தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க