
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள கல்லூரி பெண் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார், ஆனால் இந்தியாவின் ஜே.என்.யு கல்லூரியில் படித்த ஆண் ஒருவர் பெண் உடையில் இருப்பதாக ஒப்பிட்டு இப்படங்களை இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.
Female Soldier of Israel & Male (Kinnar) Specimen (Namoonaa) from JNU/DU/Jamiya? pic.twitter.com/gw5gtT93BE
— ANGRY BIRD 💎 (@angryladki) October 13, 2023
உண்மை என்ன ?
இந்து மக்கள் கட்சி பகிர்ந்த புகைப்படத்தில் முதலில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை இணையதளங்களான istockphotoல் 2021ம் ஆண்டிலும், alamy-ல் 2020ம் ஆண்டிலும் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த புகைப்படத்தின் கீழே, அழகான தொழில்முறை பெண் உளவு அதிகாரி மெய்க்காப்பாளர் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார் என்றுள்ளது. இந்த புகைப்படத்தின் கிரெடிட் guruXOOX என்ற ஐடிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த ஐடி-யை கிளிக் செய்த போது அதே பெண்ணின் வேறு சில புகைப்படமும் கிடைத்தது. அதில் எங்கும் இஸ்ரேல் எனக் குறிப்பிடவில்லை.

அடுத்ததாக, சேலை அணிந்து இருக்கும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021ம் ஆண்டு டிசம்பரில் thebongmunda - Pushpak Sen எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Instagram post link

‘Signal Hire’ எனும் இணையதளத்தில், புஷ்பாக் சென் தன்னுடைய பி.ஏ பட்டத்தை அசுதோஷ் கல்லூரியிலும், எம்.ஏ பட்டத்தை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், பி.ஜி டிப்ளோமாவை தி ஸ்டேட்ஸ்மேன் ஸ்கூல் ஆப் பிரிண்ட் ஜர்னலிசத்திலும், முதுகலைப் பட்டத்தை இத்தாலியின் பொலிமோடாவிலும் படித்துள்ளதாக இடம்பெற்று இருக்கிறது. அவர் ஜே.என்.யு மாணவர் அல்ல என்பதை அறிய முடிகிறது.

