YouTurn

பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய விரும்பாத இந்திய ராணுவ அதிகாரிகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய விரும்பாத இந்திய ராணுவ அதிகாரிகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பஞ்சாப் காவல்துறை டிஜிபி கௌரவ் யாதவ் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் வாத்வா ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது.

பரவிய செய்தி

பாகிஸ்தான் உடன் நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம் எனக் கூறி விலகிச் செல்லும் இந்திய ராணுவ அதிகாரிகள். அசிங்கப் பட்டான் மதவெறி ஓநாய் 56"


image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் அதிரடியான எதிரெதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது. 


இந்நிலையில்  ‘பாகிஸ்தான் உடன் நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம் எனக் கூறி விலகிச் செல்லும் இந்திய ராணுவ அதிகாரிகள்’ என வீடியோ ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன ?

பரவி  வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் bikramsinghmajithia-வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 25, 2025 அன்று வைரலான காணொளியை பதிவிட்டுயிருந்த தை காண முடிவந்தது. அதில் "கர்னல் புஷ்பிந்தர் சிங் பாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்வதற்காக தொடர்ந்து கேள்விகளைக் கேட்டதற்காக" பத்திரிகையாளர் மான் அமன் சிங் சினாவை அவர் பாராட்டியிருந்தார். 


இது குறித்து keywords மூலம் கூகுளில் தேடிய போது, Chandigarh SP Manjeet Sheoran to probe Col Pushpinder Singh Bath ‘assault’ case என்ற தலைப்பில் INDIAN EXPRESS வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் 2025 மார்ச் மாதம்  பாட்டியாலா தாபாவிற்கு வெளியே வாகன நிறுத்துமிட தகராறில் பஞ்சாப் காவல்துறையினரால் இந்திய ராணுவ கர்னல் புஷ்பிந்தர் சிங் பாத் மற்றும் அவரது மகன் அங்கத் ஆகியோர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சண்டிகர் காவல்துறை எஸ்பி மஞ்சீத் ஷியோரன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுயிருந்தது. 

image.png


அதே போல் மார்ச் 22, 2025 அன்று ANI ஊடகம் வெளியிட்ட செய்தியில், கர்னல் புஷ்பிந்தர் பாத் மீதான தாக்குதல் தொடர்பாக நான்கு பாட்டியாலா காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக Government of Punjab யூடியூப் பக்கத்தில், பஞ்சாப் காவல்துறை டிஜிபி கௌரவ் யாதவ் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் வாத்வா ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது. 


முடிவு : 

எனவே, புஷ்பிந்தர் சிங் பாத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின் பழைய காணொளி என்பது உறுதியானது. அதை பாகிஸ்தான் உடன் நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம் எனக் கூறி விலகிச் செல்லும் இந்திய ராணுவ அதிகாரிகள்’ என தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.