YouTurn

இந்தியா எனப் பரப்பப்படும் மலேசியாவில் சீன நிறுவனம் இரயில் பாதை அமைக்கும் பணியின் வீடியோ !

இந்தியா எனப் பரப்பப்படும் மலேசியாவில் சீன நிறுவனம் இரயில் பாதை அமைக்கும் பணியின் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான புதிய இந்தியாவின் ரயில் பாதை அமைக்கும் வேகம்... 

X link | Archive link

விரிவான விளக்கம்

ரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவில் ரயில் பாதை அமைக்கும் பணி நவீன இயந்திரங்களுடன் வேகமாக நடைபெற்று வருவதாக பாஜக சிந்தனையாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கணியாம்பூண்டி செந்தில் X (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதே தகவலை பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணையத்தில் தேடியதில், 2023 டிசம்பர் 12ம் தேதி ‘News.CN’ என்னும் தளத்தில் இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தியைக் காண முடிந்தது. 



அச்செய்தியில் ‘சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி’ மூலம் மலேசியாவில் உள்ள குவான்தான் (Kuantan) நகரில் கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா எனப் பரப்பப்படுகிற வீடியோவிலும் ‘China Communications Construction’ என்று இருப்பதைக் காண முடிகிறது. 

[caption id="attachment_51323" align="aligncenter" width="465"] இந்தியா எனப் பரவக்கூடிய வீடியோவில் இருப்பது.[/caption]

‘சீனா பிரஸ்’ என்னும் பேஸ்புக் பக்கத்திலும் குவாந்தான் நகரில் அமைக்கப்படும் ரயில் பாதை தொடர்பான வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ‘சீனா நியூஸ்’ என்னும் X பக்கத்திலும் புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. அதிலும் மலேசியா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.



செய்திகளில் உள்ள இயந்திரத்திலும் பரவக் கூடிய வீடியோவில் உள்ள இயந்திரத்திலும் ‘CCPG500’ என்றுள்ளது. இவற்றில் இருந்து மலேசியாவில் இரயில் பாதை அமைக்கும் வீடியோவினை இந்தியா எனத் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.



இந்தியாவிலும் இரயில் பாதை அமைக்க இது போன்ற இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அப்படி 2020, ஜூலை மாதம் இந்தியாவில் முதன் முதலாக இயந்திரம் மூலம் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாக NEWS STATION’ என்னும் யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 



அந்த வீடியோவில் இரயில் பாதை அமைக்கும் இயந்திரத்திலும், பணியாளர்களின் தலைக்கவசத்திலும் ‘TATA’ என எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். 

முடிவு: 

நம் தேடலில், இந்தியாவில் இரயில் பாதை அமைக்கும் பணி என பாஜகவினர் பரப்பும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல. அது China Communications Construction எனும் நிறுவனம் மலேசியாவில் மேற்கொண்டு வரும் ரயில் பாதை அமைக்கும் பணியின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க