YouTurn

ராகுல்காந்தி முகலாய மன்னரின் வாரிசு எனப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

ராகுல்காந்தி முகலாய மன்னரின் வாரிசு எனப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக முகலாய மன்னரின் புகைப்படத்தை வைத்து போலியாக எடிட் செய்து பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

இராகுல் முகலாய மன்னரின் வாரிசு


விரிவான விளக்கம்

மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று வாட்சப்பில் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ராகுல் காந்திக்கு பின்னால் முகலாய பேரரசர் பாபரின் படம் உள்ளது என்றும் ராகுல் காந்தி முகலாய வாரிசு என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவல் தெலுங்கு மொழியிலும் பேஸ்புக்கில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படம் குறித்து தேடியதில், ’India Today’ இணைய தளத்தில் ’2017, டிசம்பர் 11ம் தேதி வெளியான செய்தி ஒன்றை காண முடிந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் 2017ம் ஆண்டு நடைப்பெற்றது. அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தது பற்றிய செய்தியில் பரவக் கூடிய அதே புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் ராகுல் காந்திக்கு பின்னால் பாபரின் புகைப்படம் இல்லை. அங்கு காந்தியின் படம் தான் உள்ளது.

image.png

மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இதே புகைப்படம் 2017 டிசம்பர் 4ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் காந்தியின் புகைப்படம்தான் உள்ளது.

https://x.com/i/web/status/937561221003231232

இவற்றில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாபர் படம் இருப்பதாக பரவக் கூடிய புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. காந்தியின் படத்தை எடிட் செய்து தவறாக பரப்புகின்றனர்.

rahul gandhi babar photo

முன்னால் பிரதமர் நேரு குடும்பத்தினர் (இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என பல பொய் செய்திகள் இதற்கு முன்னர் பரப்பப்பட்டுள்ளது. அவை பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 'கல்வியால் நான் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லீம், துரதிஷ்டவசமாக பிறப்பால் நான் ஒரு இந்து' என்று கூறினாரா நேரு?

மேலும் படிக்க: காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என ராகுல் காந்தி அறிவித்ததாகப் பரப்பப்படும் பொய் செய்தி!

முடிவு :

ராகுல் காந்திக்கு பின்னால் பாபரின் படம் இருப்பதாகப் பரவக் கூடிய புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அந்த இடத்தில் காந்தியின் புகைப்படம் தான் உள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.