YouTurn

கராஞ்சியின் சம்சாரா ஏரியில் மனித முக வடிவில் மீன்கள் உள்ளதாகப் பரவும் AI வீடியோ !

கராஞ்சியின் சம்சாரா ஏரியில் மனித முக வடிவில் மீன்கள் உள்ளதாகப் பரவும் AI வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கராஞ்சியின் தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டலப் பகுதியில் நைல் நதியின் வெப்பமண்டல ஆதாரங்களின் ஏரிகளில் ஒன்றான சம்சாரா ஏரி உள்ளது. சமீபத்தில், மனித முகத்தை ஒத்த விசித்திரமான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டது! இது நீர்வாழ் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

ராஞ்சியின் நைல் நதியின் வெப்பமண்டல ஆதாரங்களின் ஏரிகளில் ஒன்றாக சம்சாரா ஏரியில் மனித முகத்தை ஒத்த விசித்திரமான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி 1:25 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவின் ஆரம்பத்தில், "Homo Piscis (மனித முக வடிவில் மீன்கள்)" என்று குறிப்பிடப்பட்டு, வீடியோ முழுவதும் பல வகையான மீன்கள் காட்டப்படுகின்றன. இதில் மீன்கள் அனைத்தும் மனித முக வடிவில் இருப்பதைக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ முதன்முதலில் Headtap Videos என்ற யூடியூப் பக்கத்தில் தான் ஜனவரி 18, 2024 அன்று "மனித முகம் கொண்ட மீன் பற்றிய திடுக்கிடும் உண்மை" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

மேலும் இதே யூடியூப் பக்கத்தில், 'கண்ணுடன் காட்சியளிக்கும் செடி' என்று குறிப்பிட்டும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.



எனவே Headtap Videos என்ற யூடியூப் பக்கம் குறித்து மேலும் தேடியதில், இந்த சேனலின் விளக்கத்தில் "கிராஃபிக்ஸ் மற்றும் வீடியோக்களின் சோதனைகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம் இந்த யூடியூப் பக்கங்களில் உள்ள வீடியோக்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.

மேலும் பரவி வரும் வீடியோவின் காட்சிகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய, hivemoderation இணையதளத்தில் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இந்த புகைப்படம் 99.9%, AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நமக்கு காட்டியது.



மேலும் பரவி வரும் பதிவுகளில், கராஞ்சி பகுதியின் சம்சாரா ஏரியில் தான் இந்த அரியவகை மீன்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த ஏரி குறித்து தேடினோம். கர்நாடகாவின் மைசூருவில் கராஞ்சி என்ற பெயரில் ஒரு ஏரி இருப்பதை அறிய முடிந்தது. ஆனால் கராஞ்சி என்ற பகுதியில், சம்சாரா என்ற பெயரில் எந்தவொரு ஏரியும் இல்லை. 

மேலும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள் எனத் தவறாகப் பரப்பப்படும் AI படம் !

முடிவு:

நம் தேடலில், கராஞ்சியின் சம்சாரா ஏரியில் மனித முக வடிவில் மீன்கள் உள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இவை போலியாக உருவாக்கப்பட்ட AI வீடியோ என்பதையும் அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க