YouTurn

இந்தியாவில் ஊழல் குறித்து புகார் அளிக்க Hotline எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி!

இந்தியாவில் ஊழல் குறித்து புகார் அளிக்க Hotline எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின் (OPMCM) கீழ் இயங்கும் ஒரு திட்டம், இந்தியாவில் செயப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல.

பரவிய செய்தி

அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழலை நீங்களே நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

image.png

Archived Link

விரிவான விளக்கம்

அரசு அலுவலங்களில் நடக்கும் ஊழலை நேரடியாக புகாரளிக்க 9851145045 என்ற Hotline எண்ணை தொடங்கியுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த உண்மை தானா என்பதை அறிய, முக்கிய வார்த்தைகளை வைத்து தேடலை தொடங்கினோம். அப்போது அப்போது Republica ஊடகத்தில் ”PM Karki launches hotline to address public grievances related to govt service delivery” என்ற தலைப்பில் செப்டம்பர் 20, 2025 அன்று வெளியான ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் நேபாள பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் முழு(OPMCM), பேரம் பேசுதல், லஞ்சம் கேட்பது, தேவையாற்ற துன்புறுத்தல் அல்லது அரசு அதிகாரிகளின் அவமரியாதை நடத்தை உள்ளிட்ட ஏதேனும் தவறான நடத்தை ஏற்பட்டால் 9851145045 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று கேட்டு கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


அதே போல் நேபாள ஊடகமான Nepal telecom ஊடகத்தில், ”Sushila Karki’s government launches hotline to address grievances” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் நேபாள பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழு(OPMCM), அரசு சேவைகள் தொடர்பான பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்ப்பதற்காக, பொதுமக்களுக்காக ஒரு Hotline எண்ணை அறிவித்துள்ளதாகவும், பிரதமர் சுஷிலா கார்க்கியின் அரசாங்கம் பொதுமக்களை சென்றடைவதற்காக செப்டம்பர் 20 அன்று 9851145045 என்ற Hotline எண்ணை தொடங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இதை உறுதிசெய்ய, நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின்(OPMCM)வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்தோம். அப்போது Hello Government என்ற பிரிவில் Viber மற்றும் WhatsApp-க்கான அதே எண்(9851145045) இருந்தது பார்க்கமுடிந்தது. 


முடிவு:

நம் தேடலில், பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக ஊழலைப் புகாரளிக்க நேபாளம் போல் இந்தியாவில் ஒரு Hotline எண் இல்லை. எனவே பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொலைப்பேசி எண்ணை (9851145045) அறிமுகப்படுத்தியுள்ளார் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க