யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோவில் இருப்பவரின் பெயர் டாக்டர் அகமது அலி. இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து சந்தையில் சுற்றித் திரிய வைத்தனர்.
பரவிய செய்தி
பங்களாதேசில் 43 வருடம் ஆசிரியராக பணிபுரிந்த சிறுபான்மை ஹிந்து ஆசிரியருக்கு அந்த நாட்டு பெரும்பான்மை பாயானுங்க சார்பில் நடத்தபட்டபிரிவு உபசார விழா இந்தியாவில் எந்த சிறுபான்மை இஸ்லாமிய ஆசிரியர்க்கும் இந்த கொடுமை நடந்தது இல்லை வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பாதே சிறந்தது.

விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் 43 வருடமாக ஆசிரியராக பணிபுரிந்த ஹிந்து மதத்தை சேர்ந்த நபருக்கு, இஸ்லாமியர்கள் செருப்பு மாலை அணிவித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பங்களாதேசில் 43 வருடம் ஆசிரியராக பணிபுரிந்த சிறுபான்மை ஹிந்து ஆசிரியருக்கு அந்த நாட்டு பெரும்பான்மை பாயானுங்க சார்பில் நடத்தபட்டபிரிவு உபசார விழா
இந்தியாவில் எந்த சிறுபான்மை இஸ்லாமிய ஆசிரியர்க்கும் இந்த கொடுமை நடந்தது இல்லை
வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பாதே சிறந்தது pic.twitter.com/wUyQlUGrvZ
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ஜூன் 19, 2025 அன்று பரவி வரும் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுருப்பதை பார்க்கமுடிந்தது. அந்தப் பதிவில், வைரல் காணொளியில் துன்புறுத்தப்பட்ட நபரின் பெயர் டாக்டர் அகமது அலி என்றும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி எத்தனை மத வெறியர்கள் அவரை சித்திரவதை செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த செய்தி குறித்து மேலும் தேடி பார்த்தோம். அப்போது ஜூன்15, 2025 அன்று வங்கதேச ஊடகமான காலர் காந்தோவில் புகைப்படங்களுடன் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் டாக்டர் அகமது அலி என்ற நபர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து சந்தையில் சுற்றித் திரிய வைத்தனர். இதையடுத்து காவல்துறையினரும், ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்குச் சென்று, நிலைமையை அமைதிப்படுத்தி அந்த நபரை மீட்டனர்.

இதே போல் dhakatimes24, bangla.bdnews24 போன்ற வங்கதேச ஊடகப் பக்கத்திலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில் காலணி மாலை அணிந்திருப்பவர் ஒரு இந்து அல்ல, மாறாக ஒரு இஸ்லாமியர் என்பது தெளிவாகியுள்ளது. மத வெறுப்பு நோக்கத்தோடு தவறாக பரப்பி வருகின்றனர்.