யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டெல்லியின் காசிப்பூர் பகுதியில் லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஷபீர் அகமது லோனை கடந்த மார்ச் 30, 2026 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
டெல்லியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியவர்களுடன் தொடர்புடையதாக வங்கதேசத்தவர்கள் 6 பேரை, பிப்ரவரி 23, 2026 அன்று திருப்பூரில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியையும் திருப்பூரில் வைத்து, டெல்லி போலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என்று இந்து முன்னணி அமைப்பினர் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியை திருப்பூரில் கைது செய்ததாக இந்து முன்னணி அமைப்பினர் பரப்பும் தகவல் குறித்து தேடினோம். அப்போது பரவி வரும் பதிவில் உள்ள புகைப்படம் வைத்து, தினமணி ஊடகத்தில் மார்ச் 30, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு வேலை பார்த்ததாக சந்தேகத்திற்குரிய Shabbir Ahmed Lone என்ற நபரை காசிப்பூர் பகுதியில் கைது செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிப் பார்த்த போது, டெல்லியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியவர்களுடன் தொடர்புடையதாக வங்கதேசத்தவர்கள் 6 பேரை, பிப்ரவரி மாதம் திருப்பூரில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி Shabbir Ahmed Lone-ம், திருப்பூரில் கைது செய்யப்பட்டார் என்று இந்த செய்தியுடன் தொடர்புப்படுத்தி பரப்புகின்றனர்.
முடிவு:
எனவே, லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான “ஷபீர் அகமது லோன்” கைது செய்யப்பட்டது திருப்பூரில் அல்ல, டெல்லியில். இந்து முன்னணி அமைப்பினர் தவறாகப் பரப்புகின்றனர்.
