YouTurn

கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹிஜாப் உரிமைக்காகப் போராடிய இந்தப் பெண் 'முஸ்கான்' நினைவிருக்கிறதா? அவர் இப்போது லண்டனில் இருக்கிறார். கர்நாடகாவில் பாஜக எதிர்ப்புக்குப் பிறகு வாழ்க்கையும் மாறிவிட்டது! அரசும் மாறிவிட்டது, அவர்கள் வேலையும் முடிந்துவிட்டது!Facebook Link

விரிவான விளக்கம்

ர்நாடகாவில் கடந்த 2022 பிப்ரவரியில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பல்வேறு கலவரங்கள் வெடித்தன. அப்போது மாண்டியா நகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முஸ்கான் கான் என்ற மாணவி ஹிஜாப் அணிந்து சென்ற போது அங்குள்ள இந்து மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கத்த ஆரம்பித்ததும், முஸ்கான் 'அல்லாஹ்-ஹு-அக்பர்' என்று உரத்த குரலில் கத்தும் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகியது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக இருந்த முஸ்கான் லண்டனில் ஹிஜாப் அணியாமல் மார்டனான உடையில் இருக்கிறார், இப்போது கர்நாடகாவில் ஆட்சி மாறிவிட்டது அதனால் அவரின் வாழ்க்கையும் வசதியாக மாறிவிட்டது, அவர்கள் வேலையும் முடிந்துவிட்டது என்று கூறி பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகப் பரவி வருகிறது.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இவர் கர்நாடகாவின் முஸ்கான் அல்ல என்பதையும், இந்த புகைப்படத்தில் இருப்பவர் ரேடியோ ஜாக்கியான சயீமா ரஹ்மான் என்பதையும் அறிய முடிந்தது.



Archive Link

கடந்த ஜூன் 06 அன்று "அழகான லண்டன்" என்னும் தலைப்பில் சயீமா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் (Sayema) பரவி வரும் புகைப்படத்தோடு சேர்த்து மூன்று புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த புகைப்படத்தில் இருப்பவர் முஸ்கான் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.



Archive Link

இதற்கு முன்பும் கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினரான நஜ்மா நசீர் சிக்கனராலேவின் புகைப்படத்தை முஸ்கான் எனக் கூறி தவறாக பரப்பி இருந்தனர். அதேபோல், 2022ல் முஸ்கானின் புகைப்படம் என மார்பிங் செய்யப்பட்ட படத்தையும் இணைத்து வதந்தி பரப்பி இருந்தனர்.

மேலும் படிக்க: கர்நாடகாவில் அல்லா-ஹூ-அக்பர் என கோசமிட்ட மாணவியின் புகைப்படங்கள் எனப் பரப்பப்படும் வதந்தி !

முடிவு :

நம் தேடலில், கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காகப் போராடிய மாணவி முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது முஸ்கான் அல்ல என்பதையும், ரேடியோ ஜாக்கியான சயீமா ரஹ்மானின் புகைப்படத்தை தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க