YouTurn

ஹரியானா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததும் தனது உடமைகளுடன் வெளியேறும் காட்சி எனப் பரவும் தவறான புகைப்படம்!

ஹரியானா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ததும் தனது உடமைகளுடன் வெளியேறும் காட்சி எனப் பரவும் தவறான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்த பொழுது எடுத்த படம். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2014 ஆம் ஆண்டிலிருந்து ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்து வந்த மனோகர் லால் கட்டார், தனது அமைச்சரவையுடன் சேர்ந்து தனது பதவியையும் மார்ச் 12 அன்று ராஜினாமா செய்தார்.


இந்நிலையில் "அவர் தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்துள்ளார். அவரது எளிமையைப் பாருங்கள். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு இது" என்று கூறி வயதான முதியவர் ஒருவர் கையில் இரண்டு பைகளுடன் சாலையில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.







உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019 லேயே சமூக ஊடகங்களில் பரவி  வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

Confessions of teenage-by existing actuality என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2019 அக்டோபர் 24 அன்றே பரவி வரும் இதேப் புகைப்படம் "நாம் ஏழை மனிதர்கள். பையை எடுத்துக்கொண்டு செல்வோம்" என்று ஹிந்தியில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.



மேலும் ஆய்வு செய்ததில், 2019 இல் இருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படத்தில் இருப்பது, ஹரியானா முன்னாள் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் அல்ல என்பதையும் அறிய முடிந்தது.

[caption id="attachment_53718" align="aligncenter" width="1024"] Manohar Lal Khattar Photo and Viral Photo[/caption]

இதன்மூலம், ஹரியானாவில் தற்போது (மார்ச் 12 அன்று) தனது முதலமைச்சர் பதவிலிருந்து ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டாரை, 2019 லிருந்தே பரவி வரும் ஒரு புகைப்படத்துடன் தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. மேலும் இந்தப் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. 

மேலும் படிக்க: பிரதமர் மோடி பேட்மிண்டன் ஆட திணறியதாகப் பரப்பப்படும் ஹரியானா முதல்வரின் வீடியோ

முடிவு:

நம் தேடலில், ஹரியானா முன்னாள் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் தனது ராஜினாமிற்கு பிறகு அரசு வீட்டை காலி செய்யும் காட்சி எனப் பரவி வரும் புகைப்படம் கடந்த 2019 லிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும், இந்த புகைப்படத்தில் இருப்பது மனோகர் லால் கட்டார் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க