YouTurn

சஞ்சு சாம்சன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து பதிவிட்டாரா சுப்மன் கில்? உண்மை என்ன?

சஞ்சு சாம்சன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து பதிவிட்டாரா சுப்மன் கில்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சுப்மன் கில் அந்த புகைப்படத்தை எடிட் செய்யவில்லை. அது வேறு ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் கில் மற்றொரு பதிவில் சாம்சன் இருக்கும் வேறொரு புகைப்படத்தை வெளியிட்டுருந்தார்.

பரவிய செய்தி

Gill edited a photo he posted on Instagram and removed Sanju Samson from it. What is the point of erasing the Player of the Tournament from a picture? If India won the T20 WC, Sanju Samson played one of the biggest roles in that victory.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துமுடிந்தது. இதில் இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. 

இதையடுத்து இந்திய வீரர் சுப்மன் கில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தில் இருந்து சஞ்சு சாம்சனை edit செய்துவிட்டு பதிவிட்டுள்ளார் என்றும், அணியில் கில்லுக்கு பதிலாக சாம்சன் இடம்பிடித்ததால் இப்படி செய்திருக்கலாம் என்றும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் சுப்மன் கில்லின் சமூகவலைதளங்களில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்தோம். அப்போது Champions என்று குறிப்பிட்டு மார்ச் 09 அன்று, அந்த புகைப்படத்தை பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து வேறு யாரேனும் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்களா என்பதை தேடினோம். அப்போது இந்திய கிரிக்கெட் வீரர் Yashasvi Jaiswal-ம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 


அதே போல் Times Of India ஊடகப்பக்கத்தில் ”Virtually unbeatable: Former England captain reveals the secret behind India's white-ball dominance” என்ற தலைப்பில் மார்ச் 09,2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியிலும் கில் பதிவிட்டுருந்த அதே புகைப்படம் இருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இல்லை என்பது உறுதியானது. 


இது குறித்து மேலும் தேடிய போது, இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராமில், கில் பதிவிட்டுருந்த புகைப்படம் போல், மற்றொரு  புகைப்படத்தை பதிவிட்டுருந்தார். அதில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்ததை தெளிவாக பார்க்கமுடிந்தது. இதிலிருந்து சுப்மன் கில் பதிவிட்ட புகைப்படம் எடிட் செய்யவில்லை. அது வேறு ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் பதிவிட்டுருக்கிறார். 


சுப்மன் கில் வேறு ஏதேனும் பதிவுகளில் சஞ்சு சாம்சன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளாரா என்பதை தேடிப் பார்த்த போது, மார்ச் 08 அன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுருந்தார். அதில் சஞ்சு சாம்சன் இருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே கில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தைத் எடிட் செய்து, அதிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்கினார் என்று பரவி வருவது தவறானது. சுப்மன் கில் அந்த புகைப்படத்தை எடிட் செய்யவில்லை. அது வேறு ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க