யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடைபெற்றுவரும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அகிலேஷ் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மீது காலணிகள் வீசப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் ‘@vikashyadavauraiyawale’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அதனைக் கொண்டு தேடியதில் இந்த வீடியோ அப்பக்கத்தில் கடந்த 2ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு அப்பக்கத்தை ஆய்வு செய்ததில் அந்நபர் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர் என்பதை அறிய முடிந்தது.

இந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதே வீடியோ ‘News24’ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அப்பதிவை மொழிபெயர்த்ததில் மலர் மாலைகளைக் கொண்டு அகிலேஷ் வரவேற்கப்பட்டார் என்றிருப்பதை அறிய முடிந்தது.
மேலும் வீடியோவை slow-motion-ல் பார்க்கையில் அகிலேஷ் மீது வீசப்பட்டது காலணி அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அகிலேஷை மலர் மாலை வீசி மக்கள் வரவேற்றுள்ளனர். அந்த வீடியோவை காலணி வீசியதாகத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
அகிலேஷ் மீது காலணி வீசியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அவர் மீது மலர் மாலை வீசி மக்கள் வரவேற்றதைத் தவறாகப் பரப்புகின்றனர்.

सपा अध्यक्ष अखिलेश यादव का हुआ फूल मालाओं से स्वागत#AkhileshYadav #UttarPradesh @samajwadiparty pic.twitter.com/dSs7suuEwi
— News24 (@news24tvchannel) May 10, 2024