YouTurn

சீனா அதிபரால் முக்கியத்துவமற்றவராக நடத்தப்படும் மன்மோகன் சிங் என்று திரித்துப் பரப்பப்படும் வீடியோ!

சீனா அதிபரால் முக்கியத்துவமற்றவராக நடத்தப்படும் மன்மோகன் சிங் என்று திரித்துப் பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லாதபோது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

முன்னாள் இந்தியப் பிரதமரும் முன்னாள் சீன அதிபரும்... இந்த வீடியோவை நீங்களும் தேடினீர்களா... பாவம் சிங் சார்..


X Link

விரிவான விளக்கம்

கார் ஒன்றிலிருந்து வெளிநாட்டு அதிகாரி ஒருவர் இறங்கி, முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும் பின்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனும் கை குலுக்கிறார். புகைப்படம் எடுக்கும் போது மற்ற வெளிநாட்டு அதிகாரிகளும் உடன் நிற்க, அவர் சோனியா காந்தியின் அருகில் கை குலுக்கிய படி நிற்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது  இவ்வாறு தான் சீன அதிபரால் முக்கியத்துவம் இல்லாமல் நடத்தப்பட்டார். அவருக்கு ஆளுமையே இல்லை’ என்று பொருள்படும் படியாக பாஜக ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.



உண்மை என்ன?

 

பரப்பப்படும் வீடியோவை keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவைக் காணமுடிந்தது. 2015ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்தப் பதிவில், பரப்பப்படும் வீடியோவுடன் ஒத்துப்போகக்கூடிய புகைப்படங்களைக் காண்கிறோம். மேலும் அதில், ‘சீனாவின் நாடாளுமன்ற தூதுக்குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


 

அதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் மேலும் தேடுகையில், ‘Zee News’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. ஜூன் 16, 2015 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாங் டெஜியாங் தலைமையிலான நாடாளுமன்ற தூதுக்குழு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புது டெல்லியில் சந்தித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. அப்போது மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லை. நரேந்திர மோடி தான் பிரதமராக இருந்தார். மேலும், இந்த வீடியோவில் இருப்பது அப்போதைய சீன அதிபர் அல்ல, சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாங் டெஜியாங் என்பதும் தெரிய வருகிறது.

 

முடிவு:

 

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, ‘பிரதமராக இருந்த போது  மன்மோகன் சிங் சீனா அதிபரால் முக்கியத்துவம் இல்லாமல் நடத்தப்பட்டதாக’ திரித்துப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க