YouTurn

ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பரவும் தவறான செய்தி !

ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பரவும் தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை.. இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

"2024 ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை. 'இந்திய வங்கிகள் சங்கத்திடம்' (IBA) இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம்" என்று குறிப்பிடப்பட்ட செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அப்பதிவுகளில் "இதனால் வங்கிகளின் மாத விடுமுறை 6 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரிக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சவுக்கு மீடியா உட்பட பல பக்கங்கள் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஐந்து நாள் வேலைத் திட்டம் குறித்து ராஜ்யசபாவில் கடந்த டிசம்பர் 05 அன்று கேள்வி (கேள்வி எண்: 211) எழுப்பப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. அதற்குப் பதிலளித்துள்ள நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை தினங்களாக அறிவிக்க ஐபிஏ (IBA) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 



ஆனால் இந்தக் கோரிக்கை நிதி அமைச்சகத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது எதிர்காலத்தில் கொண்டுவரப்படுமா என்பது குறித்து, இதற்கான பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.



மேலும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஐந்து வார நாட்களில், வேலை நேரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசினஸ் டுடே தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: 14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி.. சுவிஸ் வங்கியில் ரூ. 30,500 கோடியாக உயர்ந்த இந்தியர்களின் பணம் !

இதற்கு முன்பும் வங்கி குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை  எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இந்த கோரிக்கை குறித்து நிதி அமைச்சகம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க