யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜரை சிலர் தாக்கியதாக கூறி பரவும் வீடியோ தவறானது என்பது தெரியவந்தது. இது குறித்து நந்த் கிஷோர் குர்ஜரே வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். மாறாக பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஹரீஷ் சௌத்ரி என்ற நபராகும்.
பரவிய செய்தி
வாக்கு திருட்டு ரிசல்ட் வரத் துவங்கிவிட்டது..!! சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி MLA நந்த் கிஷோருக்கு அடி..!! அடிச்ச அடியில் இன்னா ஓட்டம்

விரிவான விளக்கம்
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜாரை இதற்காக சிலர் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சில நபர்கள் தப்பி ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வாக்கு திருட்டு ரிசல்ட் வரத் துவங்கிவிட்டது..!!
சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி MLA நந்த்கிஷோருக்கு அடி..!!
அடிச்ச அடியில் இன்னா ஓட்டம் ..🥱🥱 pic.twitter.com/A8kLgTQnGa
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது india todayne ஊடகத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் உத்திரபிரதேசத்தின் காசியாபாத்தின் சாஹிபாபாத் காய்கறி சந்தையில் வர்த்தகர்கள் கூட்டம் நடைபெற்றபோது, துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது என்றும், இதில் ஒருவர் படுகாயமடைந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடி பார்த்த போது, Times Of India ஊடகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி “Man shot at during traders meet, eight accused arrested” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஹரிஷ் சவுத்ரி என்ற வர்த்தகர் முதலில் ரிவால்வரை உருவி முதலில் வானத்தை நோக்கி சுட்டதாகவும், பின்னர் மக்களை குறிவைத்து ஐந்து முதல் ஆறு ரவுண்டுகள் சுட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சந்தையில் பீதி ஏற்பட்டதால், சிலர் தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து வீடியோவில் துரத்தப்படும் நபர் பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் அல்ல; ஹரீஷ் சௌத்ரி என்பது உறுதியானது.

இதையடுத்து DCP TRANS HINDON COMMISSIONERATE GHAZIABAD எக்ஸ் பக்கத்தில் 11 ஆகஸ்ட் அன்று, தூப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக தாணா லிங்க் ரோடு காவல்துறையினர், முக்கிய குற்றவாளி உட்பட மொத்தம் 8 பேரை கைது செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தது.
थाना लिंकरोड पुलिस टीम द्वारा वादी पर जान से मारने की नियत से फायरिंग करने वाले मुख्य अभियुक्त सहित कुल 08 अभियुक्तगण गिरफ्तार ।@Uppolice@ghaziabadpolice pic.twitter.com/oSEsR3DHv1
இதை உறுதி செய்ய வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்தோம். அப்போது காசியாபாத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜிதேந்திர கௌதம் ஆகஸ்ட் 11 அன்று பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் பேசிய வீடியோ வெளியிட்டுயிருந்தார். அதில் பேசிய அவர், சந்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, யாரோ ஒருவர் தனது பெயரை வீடியோவில் பயன்படுத்துவதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க செய்யப்பட்டதாகவும், அந்த நேரத்தில் தான் லக்னோ வீட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
गाजियाबाद:- लोनी विधायक नंदकिशोर गुर्जर ने #साहिबाबाद_सब्जी मंडी में हुए बवाल की दी अपनी प्रतिक्रिया।@nkgurjar4bjp #MLA नंदकिशोर गुर्जर ने कहा #सोशल_मीडिया से जानकारी हुई की विधायक के साथ बतमीजी हुई है जबकि में लखनऊ सदन में हूं।
कुछ मुस्लिम लोगों द्वारा जो मंडी में कब्जा करके… pic.twitter.com/7uz9NZ66m2
முடிவு:
நம் தேடலில், காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜரை சிலர் தாக்கியதாக கூறி பரவும் வீடியோ தவறானது என்பது தெரியவந்தது. இது குறித்து நந்த் கிஷோர் குர்ஜரே வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். மாறாக பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஹரீஷ் சௌத்ரி என்ற நபராகும்.