YouTurn

விஜய் ஆட்சியில் தான் முதன்முறையாக பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதா?

விஜய் ஆட்சியில் தான் முதன்முறையாக பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2025 திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது.

பரவிய செய்தி

"ஸ்டாலினால் முடியாததை முடித்துக்காட்டிய விஜய்"


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் விஜய், கடந்த மே 14ஆம் தேதி பருத்தி இறக்குமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்படும் வரி காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் பாதிக்கப்படுவதால், அந்த வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும், அதனைத் தொடர்ந்து மே 30ஆம் தேதி பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்ததாகவும் News Card ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 


முந்தைய திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினால் முடியாத இந்த காரியத்தை தற்போதைய முதல்வர் விஜய் சாதித்து காட்டியிருப்பதாகவும் இந்த News Card-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த News Card-ஐ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்.



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த தகவல் குறித்த செய்திகளை தேடினோம். பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்லி முதல்வர் விஜய் மே 14ஆம் தேதி கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, மே 30ஆம் தேதி ஒன்றிய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதாக சொல்லப்படும் தகவல் உண்மை தான். வரி ரத்து செய்யப்படும் இந்த நடைமுறை ஜூன் 1ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31 வரை அமலில் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. 


ஆனால் இதேபோல் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 



திமுக ஆட்சியில் இருக்கும்போது 2025 ஆகஸ்ட் மாதம், இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்க அரசு சுமத்தியதால் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யச் சொல்லி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, 19 ஆகஸ்ட் 2025 முதல் 30 செப்டம்பர் 2025 வரையில் பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 


image.png


இதிலிருந்து, தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி பருத்திக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்வது இது முதல்முறையல்ல என்பது தெரியவருகிறது. 


முடிவு:


விஜய் கடிதம் எழுதி தான் முதன்முறையாக பருத்திக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ததாக தவறான தகவலை பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க