YouTurn

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாருக்கான் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாருக்கான் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருந்த பழைய வீடியோ இது. இந்த வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு ஷாருக்கான் கண்டனம் தெரிவிப்பது போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

அரசு வேலை வழங்கும் திட்டத்தின் போது நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் மூடி இருந்த ஹிஜாப்பை

இழுத்து அந்த பெண்ணின்

முகத்தைப் பார்த்தது .....

நீ ஒரு சாதாரண துணி என்று நினைத்து செய்தது ஒரு மதத்தையே அவமானப்படுத்துகிறது செயல் என்பது ஏழு கழுதை வயசாகியும் உனக்கு தெரியலையா....?

செருப்படி பதிவு

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

பீகாரில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்வில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து கொண்டு, தனது பணி ஆணையை பெற வந்தார். அப்போது அந்த பெண்ணின் ஹிஜாபை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ஹிஜாபை அவர் விலக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இந்நிலையில் சாதாரண துணி என்று நினைத்து செய்தது ஒரு மதத்தையே அவமானப்படுத்தும் செயல் என்று நடிகர் ஷாருக் கான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ndtv ஊடகப்பக்கத்தில்,"Please Don't Panic: Shah Rukh Khan's Special Appeal To Fans Amid Coronavirus Outbreak" என்ற தலைப்பில் மார்ச் 20,2020 அன்று பரவி வரும் வீடியோவின் Screenshot உடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் நடிகர் ஷாருக்கான் தனது சமூக ஊடகக் கணக்குகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றிப் பேசி தொடர்ச்சியாக வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, Bollywood Hungama ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் "Shah Rukh Khan Addresses Corona Virus Pandemic, Shares an Important Message" என்ற தலைப்பில் மார்ச் 20,2020 அன்று ஷாருக் கான் பேசிய தொடர்ச்சியான வீடியோகளில் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் "பொது இடங்களுக்குச் செல்வதையும், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த 10 முதல் 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தக் நெருக்கடியை எதிர்த்துப் போராட, அரசாங்கமும், மக்களும் இணைந்து ஒரு வலுவான கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும். மாநில அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்" என்று பேசியிருந்தார். 


முடிவு: 

எனவே, கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருந்த பழைய வீடியோ இது. இந்த வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு ஷாருக்கான் கண்டனம் தெரிவிப்பது போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க