YouTurn

காவலரைத் தாக்கும் கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் எனப் பரவும் தவறான வீடியோ!

காவலரைத் தாக்கும் கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவாவில் பாஜக அமைச்சர் மகளின் செயலைப் பாருங்கள் என்று கூறி பரவும் வீடியோ, மும்பையில் கடந்த 2022-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். மேலும் வீடியோவில் இருக்கும் பெண் பாஜக அமைச்சரின் மகள் என்று கூறி பரவும் செய்திகளும் ஆதாரப்பூர்வமற்றவை.

பரவிய செய்தி

கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் கொழுத்த குடிபோதையில், போலீஸ்காரரிடம் வம்படி வம்பு செய்யும் காட்சி. "நண்டு கொழுத்தால், வளையில் தங்காது" என்பார்கள். "ஆட்சி அதிகாரம் கிடைத்தால், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அட்டூழியம் செய்வார்கள்" என்பது காவிக் காலிகளின் நடைமுறை.


Facebook Link:

விரிவான விளக்கம்

கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் குடிபோதையில், காவலர் ஒருவருடன் வம்பு செய்யும் காட்சி என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் பெண் ஒருவர், காவலரை காலால் எட்டி உதைக்க வருவதையும், வம்பு செய்வதையும் தெளிவாகக் காண முடிகிறது. 



#BJP4IND #BJPNEWS pic.twitter.com/avMeS2p52j

— MSK (@KRISHNA29858076) June 30, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2022-ல் இருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



இது குறித்து மேலும் தேடியதில், “News18” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2022 ஜூன் 20 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “2022 மார்ச் 25 அன்று மும்பையில் நடந்த ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு அடையாளம் தெரியாத பெண் தனது 2 நண்பர்களுடன் டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் பரவி வரும் சம்பவம், கோவாவில் நடைபெற்றது அல்ல. மும்பையில் கடந்த 2022-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பதை அறிய முடிகிறது. மேலும் பாஜக அமைச்சரின் மகள் தான் இந்த பெண் என்று பரவும் செய்தியும் ஆதாரப்பூர்வமற்றது என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் குடிபோதையில், காவலர் ஒருவருடன் வம்பு செய்யும் காட்சி என்று பரவி வரும் வீடியோ, மும்பையில் கடந்த 2022-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க