யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடைபாதைக் கடைகளை காலி செய்யச் சொல்லும் காவல்துறையினரிடம் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுவடுவதாகப் பரவும் வீடியோ, ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
#காவல் துறைக்கு #மாமுல் இல்லையா...
சிறு கடைகள் இருக்காது...
அதிகாரிகள் எவ்வளவு #கொள்ளை அடித்து கொள்ளுங்கள்...
#ஸ்டாலின் எதை சொன்னாலும் கேட்க வேண்டும் ..
#போதைப்பொருள் விற்று பிழைத்து கொள்ளலாம்...
#நேர்மையாக வாழ கூடாது...
#ஸ்டாலின் கட்டளை..

விரிவான விளக்கம்
சாலையோர உணவு கடையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் அகற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் “சிறு வியாபாரிகளை வாழவிடுங்கள்” என்று எழுதப்பட்டு, தமிழ் திரைப்பட பாடல் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது East Coast என்ற எக்ஸ் பக்கத்தில், ஜூலை 17, 2024 அன்று இந்த வீடியோ பதிவாகியிருந்ததை காணமுடிந்தது. அதில் இது தான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய காரணம் என்றும், ஏழைகளைத் தாக்குவது ஏன்?, துணிச்சல் இருந்தால் பணக்காரர்களை தண்டியுங்கள் என்று அந்த பெண் கேட்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த வீடியோவில் அனைவரும் தெலுங்கு மொழியில் பேசிக்கொள்வதையும் பார்க்கமுடிந்தது.
This is the very reason why one should leave India!
She feels entitled by occupying the foot path!!
And she might get support from the public by saying, why attacking the poor ? If you have guts, go and punish the rich!! pic.twitter.com/ZA0sffSyuc
இது குறித்து மேலும் தேடியப் போது, Naresh Pesini என்ற எக்ஸ் பக்கத்தில் ஜூன் 27, 2024 அன்று இதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. தெலுங்கு மொழியில் இருந்த அந்த வீடியோவின் caption-ஐ, தமிழில் மொழி பெயர்த்து பார்த்தோம். அதில் ”சாலையோர மதுக்கடைகளால் ஏற்படாத போக்குவரத்து பிரச்சனையா உணவு விற்பனையாளர்களால் ஏற்படப்போகிறது” என்று குறிப்பிட்டி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெயரும் டேக் செய்யப்பட்டிருந்தது.
రోడ్ సైడ్ వైన్ షాప్స్ వల్ల లేని ట్రాఫిక్ సమస్యలు తిండి పెట్టే వాళ్ళ వల్ల వస్తుందా సార్???@revanth_anumula @NtvTeluguLive @TV9Telugu pic.twitter.com/amvrpzV7wh
அதே போல் அந்த வீடியோவின் COMMENT பகுதியில் குமார் அக்கா கடை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடிய போது, ஹைதராபாத்தில் உள்ள குமாரி அக்கா கடையில் VLOG செய்த வீடியோக்களை பார்க்கமுடிந்தது. பரவி வரும் வீடியோவில் இருப்பது போன்ற அதே கட்டடங்கள், vlog எடுக்கப்பட்ட வீடியோவில் இருப்பதையும் காணமுடிந்தது.
இதை வைத்து கூகுள் மேப்பில் தேடிய போது, “Kohenur Rd, Hydrabad, Telangana” என்ற பகுதியில் பரவி வரும் வீடியோவில் இருக்கும் கட்டடங்களை காண முடிந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், நடைபாதைக் கடைகளை காலி செய்யச் சொல்லும் காவல்துறையினரிடம் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுவடுவதாகப் பரவும் வீடியோ, ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.