YouTurn

கேரளாவில் இந்துகளின் இசை நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் தவறான செய்தி!

கேரளாவில் இந்துகளின் இசை நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆலப்புழாவில் கோவில் திருவிழா ஒன்றில், இரவு 10 மணிக்குப் பிறகு அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடந்ததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை தடை செய்த இஸ்லாமியர்கள் எனக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக தவறான செய்திகளை பலரும் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

Muslims in kerala stopped classical Music Concert.._with 20% population this community dares to stop Hindu Programs. நாட்ல துலுக்கர்கள் அதிகமானால் இப்படித்தான் நடக்கும். விழிப்புணர்வு தேவை இந்து சொந்தங்களே..

image.png

Archived Link

விரிவான விளக்கம்

கேரளாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, ஒரு சிறுமி வயலின் வாசிப்பதை நிறுத்தும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தான் நிறுத்தியதாக சமூகவலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் மலையாள ஊடகமான மனோரமா நியூஸின் லோகோ இடம்பெற்றிருப்பதை காணமுடிந்தது. இதை வைத்து அந்த ஊடகத்தில் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது மார்ச் 5, 2025 அன்று மனோரமா செய்தி ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் "ஆலப்புழாவில் உள்ள கோட்டம்குளங்கர கோவிலில் நடைபெற்ற கங்கா சசிதரனின் வயலின் இசை நிகழ்ச்சியை இரவு 10 மணிக்கு நிறுத்துமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இது குறித்து மேலும் தேடுகையில், அதே மனோரமா செய்தி ஊடகத்தில் மார்ச் 9, 2025 அன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆலப்புழாவில் உள்ள கொட்டாங்குளங்கர கோவிலில் 10 வயது சிறுமி கங்காசசிதரனின் வயலின் இசை நிகழ்ச்சியை வலுக்கட்டாயமாக நிறுத்திய காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக பரவலான போராட்டங்கள் வெடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் அந்த செய்தியில் ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி, அந்த 10 வயது சிறுமியை அழைத்து வயலின் வாசிக்க வைத்து கைதட்டி ஊக்குவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து கேரள காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் "கேரளாவில், இரவு 10:00 முதல் அதிகாலை 06:00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் பொது நிகழ்ச்சிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு:

நம் தேடலில், ஆலப்புழாவில் கோவில் திருவிழா ஒன்றில், இரவு 10 மணிக்குப் பிறகு அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடந்ததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். இதை கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை தடை செய்த இஸ்லாமியர்கள் எனக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக பாஜகவினர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க