YouTurn

தமிழ்நாட்டில் பத்திரபதிவு துறை அதிகாரி கழிவறையில் லஞ்சம் வாங்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

தமிழ்நாட்டில் பத்திரபதிவு துறை அதிகாரி கழிவறையில் லஞ்சம் வாங்கியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

புதுச்சேரி பத்திரப்பதிவு துறையின் கழிவறையில் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பத்திரபதிவு துறையின் அதிகார நாய் ஒன்று கழிவறையில்

(வைத்து பீய்யை தின்னும் sorry sorry) லஞ்சம் வாங்கும் வீடியோ ! வைரலாகி வருகிறது.

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் பத்திரபதிவு துறையின் அதிகாரி ஒருவர் கழிவறையில் லஞ்சம் வாங்குவதாக கூறும் 1 நிமிடம் 7 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது விகடன் ஊடகத்தில் ஜூன் 20 அன்று, பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் புதுச்சேரி பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கழிவறையில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் இதை உறுதி செய்ய தேடி பார்த்த போது, "பத்திர பதிவு செய்ய கழிவறையில் லஞ்சம்; புதுச்சேரியில் சார்ப்பதிவாளர் மீது நடவடிக்கை!" என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஊடகப்பக்கத்தில் ஜூன் 20ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு பத்திரம் பதிவு செய்வதற்கு புதுச்சேரி சாரம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் உள்ள கழிவறையில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் கொடுப்பதை சம்மந்தப் பட்டவர்கள் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் Oneindia Tamil ஊடகத்திலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.


முடிவு: 

நம் தேடலில்,இது புதுச்சேரி பத்திரப்பதிவு துறையின் கழிவறையில் அதிகாரி  ஒருவர் லஞ்சம் வாங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க