யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த ஆண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் இந்தியா கலந்து கொண்டது. இந்நிலையில் ஜி7 மாநாட்டின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட புகைப்படத்தை பரப்பி, பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ஜி 7 மாநாட்டில் பங்கேற்றவர்களின் புகைப்படத்தில் மோடியின் புகைப்படம் இல்லையே!
அப்போ மோடி பேசியது எங்கே?
ஜி 7 மாநாட்டு தலைவர்கள் ஒன்று கூடி பேசி முடித்து மாநாட்டை நிறைவு செய்த பிறகு, ஜீ7 நாடுகளின் தலைவர்களுடன் பேசியயை, ஏதோ மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்று பேசியதை போல் வெளியிட்டு பாஜக இழிவான போலி விளம்பரத்தை தேடுகிறது.

விரிவான விளக்கம்
ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்கவே இல்லை என்றும், ஜி7 தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் மோடி இல்லை எனவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாநாட்டில் பங்கேற்காமலேயே பங்கேற்றதாக இந்தியாவில் விளம்பரம் செய்து கொண்டது போன்றும் பதிவிட்டு வருகின்றனர்.
When all the leaders of G7 countries are posing together for photo, why Indian PM Narendra Modi is missing?
Where is non-biological, vishwaguru Modi Ji? #G7Summit pic.twitter.com/swLcjnEqVp
உண்மை என்ன?
ஜி7 நாடுகளில் இந்தியா உறுப்பினர் இல்லை தான். ஆனால் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மணி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி7 மாநாட்டில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் படி இந்தாண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார் என்று 18 ஜூன் 2025 அன்று சமயம் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில் பார்க்கமுடிந்தது.

இதையடுத்து ஜி7 மாநாட்டின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட புகைப்படத்தை வைத்து, பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்று பரவி செய்தி குறித்து ஆய்வு செய்தோம். அப்போது ஜி7 இணையதளத்தில் மல்டிமீடியா பகுதியில் மாநாட்டுக்கு வந்த தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில் ஜூன் 18 அன்று, ”Family photo with outreach partners” என்ற தலைப்பில் வெளியான புகைப்படங்களில், பிரதமர் மோடி இருந்ததை பார்க்கமுடிந்தது.

அதே போல் ”உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்!” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
Together for global progress!
Productive exchanges with G7 leaders on key global challenges and shared aspirations for a better planet.@G7 pic.twitter.com/TioazmFnlx
மேலும் NDTV, News Tamil 24x7 போன்ற ஊடகங்களும், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதை குறித்து செய்தி வெளியிட்டுயிருந்தனர்.
முடிவு :
எனவே, ஜி7 மாநாட்டின் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட புகைப்படத்தை பரப்பி, பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். மற்ற புகைப்படங்களில் அவர் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.